திங்கள், 14 மார்ச், 2016

திராவிட இயக்கத்தின் இன்றியமையாத் தேவை காரணமாகத்தான் காலம் கலைஞரை..பழ கருப்பையா

இயற்கையிலேயே திமிரினுடைய உச்சகட்டமாக இருப்பவர் ஜெயலலிதா. "நான், எனது ஆட்சி... எனது தலைமையில்...'என்றுதான் அவரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படும். ஜனநாயகத்தில் அமைச்சரவையின் கூட்டு முடிவுதானே அரசு என்பது? அதையெல்லாம் மறந்து, "நான் சொல்வது மட்டும்தான்' என ஜனநாயகத்தை சீரழித்து, மாநிலத்தை சீரழித்து, திராவிட இயக்கக் கொள்கைகளைக் கொல்பவர் ஜெயலலிதா. >என் மீது அந்த அம்மாவுக்கு என்ன கோபம்? சித் திரையில்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று மீண்டும் மாற் றியதற்காக நடந்த பாராட்டு விழாவில் நான் பேசும்போது, "திருவள்ளுவர் ஆண்டை சித்திரை மாதத் துடன் இணையுங்கள்'' என்று நான் சொன்னேன். கருணாநிதி நல்ல எண்ணத் தோடு தை மாதத்தில் தமிழ் ஆண்டு பிறப்ப தாகச் சொன்னார்.
மக்களிடம் அந்தக் கருத்துப் போய் சேரவில்லை. ஜெயலலிதா, மக்களிடம் ஏற்கனவே பழக்கத்தில் உள்ள சித்திரையே தொடரட்டும் என்றார். நான் சொன்னேன் : "சித்திரையே இருக்கட்டும்; ஆனால், தமிழ் ஆண்டுக் கணக்கான திருவள்ளுவர் ஆண்டை சித்திரையோடு இணையுங்கள்'' என்று. "ஏனென்றால் தமிழ் ஆண்டு என்று சொல்லப்படுகிற பிரபவ, விபவ, நந்தன என்பவை உண்மையிலேயே சமக்கிருத ஆண்டுகள். திருவள்ளுவர்தான் தமிழின் முகம்!'' என்றேன். இப்படி நான் பேசியதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜா ராம் என்னிடம், "அம்மா ரொம்பவும் கோபப்பட்டார்கள்'' என்றார். "திருவள்ளு வர் பெயரை நிலைநாட்டவேண்டும். சமக்கிருத ஆண்டை ஒழிக்க வேண்டும்' என்று சொன்னால் கோபமா?

அ.தி.மு.க. என்னும் பெயரை ஆரிய முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே?<>பிறப்பிலேயே "பார்ப்பன ஆண்டு முறை, வேள்வி' என்று வளர்ந்து பழக்கப் பட்டவர் அந்த அம்மையார். அதனால் தான் சிதம்பரம் நடராஜர் கோயிலைக் கொண்டுபோய் மீண்டும் தீட்சிதர்களிடம் கொடுக்க மறைமுகமாக உதவினார். அந்தக் கோயிலை தீட்சிதர்களின் கொள்ளுப் பாட்டனார்களா கட்டினார்கள்? சோழர்கள் கட்டிய கோயிலை எதற்காகக் கொண்டு போய் தீட்சிதர்களிடம் கொடுக்க வேண்டும்? தீட்சிதர்களுக்காக சுப்ரமணிய சாமி பரிந்து பேசுவது புரிகிறது. இந்த அரசாங்கம் எதற்கு பரிந்து நடந்துகொள்ள வேண்டும்? இது திராவிட அரசுதானா?

திராவிட அரசாங்கம் என்ற பெயரில் இவர்கள் அரசாள்கிறார்களே தவிர, திராவிடக் கொள்கை கள் நீர்த்துப் போனதற்கு தொடக்கம் எம்.ஜி.ஆர். என்றால், அதற்குப் பெரிய அளவுக்கு காரண மானவர் ஜெயலலிதா. திராவிட இயக்கம் புதுப்பிக்கப்படவேண்டும்.

கலைஞர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும்தான் திராவிட இயக்கத்தில் இன்றைக்கு எஞ்சி நிற்கின்ற தலைவர்கள். பெரியாரோடும் அண்ணாவோடும் பழகி, அவர்களிடமிருந்து திராவிட இயக்கக் கருத்துகளைப் பெற்று இன்றைக்கும் அந்த உணர்வோடு திராவிடம் என்ற பெயரை இடையறாமல் சொல்லிக்கொண்டிருப் பவர்கள் இந்த இரண்டு தலைவர்களும்தான்.>மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் பிளவுபடுத்தப்பட்ட சமுதாயத்தை இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் ஒன்றுபடுத்திய பெருமை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் உண்டு. அதனால்தான் இந்து என்கிற சொல் இந்த மண்ணில் எடுபடவில்லை. இந்த மண்ணின் மனிதர்கள், அடிப்படையில் திராவிடர்கள். மொழி அடிப்படையில் தமிழர்கள் என்ற கருத்து ஊறிவிட்டது.>அதனால்தான் இங்கு இந்து-முஸ்லிம் என்று பார்ப்பதில்லை. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்று பார்க்கின்ற முறை இங்கே இருக்கிறது. காரணம், தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டு பகை சமற்கிருதம்.

அதனால்தான் அந்த அம்மையார் உள்பட யாரும் மாற முடியவில்லை. அவர்கள் தங்களைத் தனி சாதியாகக் கருதுவதில்லை. நாம் எப்படி திராவிட இனம் என்று கருதுகிறோமோ அதுபோல அவர்கள் ஆரிய இனமாகவே கருதுகிறார்கள். சமற்கிருதம் அவர்களுக்குத் தாய்மொழியாகக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், கீதைதான் அவர்களுக்குப் புனித நூல். கோயில், ஜாதகம், வேள்வி என சமற்கிருதத்தை முன்னிலைப்படுத்துபவையே அவர்களுக்கு முதன்மையானவை. சமற்கிருதத்தை கோயிலை விட்டு எடுக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு உயிரே போய்விடும். ஏனென்றால், கடைசியாக சமற்கிருதம் எஞ்சியிருக்கிற இடம் கோயில் மட்டும்தான்.

இந்த நிலையில் "கோயில்களில் தமிழ் அர்ச்சனை, பார்ப்பனரல்லாதாரும் அர்ச்சகராக வேண்டும்' என்று சொல்வதற்கு கலைஞரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?  எனவே கருணாநிதியை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட வேண்டும் என்று அவர்கள் மூர்க்கம் கொள்வதற்குக் காரணம், திராவிட இயக்கமும் திராவிட இன அடையாளமும் முற்றிலுமாக கருணாநிதியோடு அழிந்து போய்விடும் என்று அவர்கள் நம்புவதே!

;திராவிட இயக்கத்தின் இன்றியமையாத் தேவை காரணமாகத்தான் காலம் கலைஞரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.&>எத்தனை நூற்றாண்டு அடிமை நிலை! nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக