புதன், 2 மார்ச், 2016

கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்



சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் (அரசு உதவிப் பெறும் கல்லூரி) பணியாற்றுகின்ற, கல்லூரி பேராசிரியர்களான அகிலாதேவி, வெண்ணிலா, சுஜாதா ஆகிய முவருக்கும் கல்லூரியில் பணியாற்றிதற்கான ஊதியத்தை தராமல், நிர்வாகம் அலைகழித்து வருகிறது. போராசிரியர்களை கல்லூரி நேரம் முடிந்த பின்னரும் வீட்டுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அரசு விடுமுறை நாட்களில் கல்லூரியை வைப்பதோடு அல்லாமல் தேர்வுகளையும நடத்துகின்றனர்.

மகளிர் கல்லூரி என்று இருக்கும்போது கழிப்பிட வசதிகளை இல்லை. மேலும், மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைப்பது. இப்படி நிர்வாகத்தின் பல்வேறு அராஜகத்தை தட்டிக்கேட்டதால், மூன்று பேராசிரியர்களை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார் கல்லுரி செயலாளர் லட்சுமி என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 01.03.2016 செவ்வாய்க்கிழமை கல்லூரிகளுக்குள் இவர்கள் 3 பேரும் சென்றதும், வருகைப் பதிவேட்டில் 3 பேரின் பெயர்களை எடுத்துள்ளனர்.

அரசால் நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களை, வருகைப் பதிவேட்டில் இருந்து பெயரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது என்று உள்ளிருப்பு போராட்டத்தல் ஈடுபட்டனர். இதற்கு மாணவிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

இதுவரை கல்லூரி நிர்வாகமோ, கல்லூரி கல்வி இயக்குநரகம் அதிகாரிகளோ பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. ஆகையால் புதன்கிழமையும் இந்தப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். செய்தி: மனோ படங்கள்: அசோக்  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக