சனி, 19 மார்ச், 2016

நடிகை ரோஜா மயக்கம்.....இரத்த அழுத்தம் சர்க்கரை நோய்.....தர்ணாவில் ஈடுபட்ட போது...


நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதாக கூறி சபாநாயகர் சிவபிரசாத் ராவ் சட்டசபையில் இருந்து ஓராண்டு இடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிட்டார் இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ரோஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆந்திர சட்டசபை சபாநாயகர் விதித்த ஓராண்டு நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நடிகை ரோஜா நேற்று காலை வந்தார். அப்போது. அவரை சட்டசபைக்குள் நுழைய விடாமல் சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றபட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்குள் செல்ல முயன்ற ரோஜாவை மீண்டும் அவைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர் சட்டசபைக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏக்கள் ரோஜாவுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,நீண்ட நேரமாக வெயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ரோஜா மயங்கி விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்   வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக