வியாழன், 17 மார்ச், 2016

வரவேற்க ஆளே இல்லாத நிலையில் வந்திறங்கிய ஓ.பி.எஸ். ( படங்கள் )

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு வந்திருந்தார் . கோவை விமானநிலையத்தில் வீல் சேரில் தனது அம்மாவுடன் கடந்த பிப்ரவரி -16 –ந் தேதி வந்திறங்கிய ஓ.பி.எஸ் முகம் தொங்கியபடியே வெளியே வந்தார்.ஒரு காலத்தில் மீடியாக்களின் ப்ளாஷ் வெளிச்சத்தில் மிதந்தும், பூங்கொத்துகளும், மாலைகளும், பொன்னாடைகளோடும், அம்மா வாழ்க ...அம்மா வாழ்க ...என்ற கோஷங்களோடும் வாகன வரிசையில் எந்த வாகனத்தில் ஏறுவது ? என்ற குழப்பத்தில் சிரித்து பயணித்த ஓ.பி.எஸ்...இப்போது  தன்னை வரவேற்க ஆளே இல்லாத நிலையில் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து வந்தார்.உறவினர்கள் யாரோ இரண்டு பேரின் கார்கள் மட்டுமே நின்றிருக்க..அதில் ஒரு காரில் தன் அம்மாவுடன்  ஏறி ஓ.பி.எஸ் பறந்ததை ஒரே ஒரு  செல்போன் மட்டுமே எடுத்தது. அந்த செல்போன் படங்கள் தான் இவை. nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக