திங்கள், 7 மார்ச், 2016

அமெரிக்க மாதாகி ஜே ! – ஆர்.எஸ்.எஸ்-ன் புதிய சாதனை !

இந்தியா எனும் அடிமைக்கு எதற்காக திடீரென்று இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவேண்டும் என்று ஆண்டீரிசன் கேட்டிருக்கும் பொழுது பாரத் மாதா ஹி ஜெய் என்றும் வந்தே மாதரம் என்றும் கோசம் போடும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் காவிக்கூட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? 
குஜராத் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி பிரதமராவதற்கு முன்பாக, 2014 மே 26-ம் தேதி, ஒரு கோவா இளைஞர் ‘மோடி பிரதமராக பதவியேற்றால் ஹோலகாஸ்ட் போன்ற பாசிசத்தை கட்டவிழ்த்துவிடுவார்’ என பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்காகவே அந்த இளைஞர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 153A, 295A, கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஐ-ன் கீழும், 66A தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
அந்த இளைஞர் சொன்னது போலவே மோடி கும்பல் ஹோலோகாஸ்ட் போன்ற தாக்குதல்களை கல்வி நிலையங்களில் இந்து தேசியத்தின் பெயரில் கட்டவிழ்த்து வருகிறது.

‘இந்தியத்தாயை புண்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று ஸ்மிருதி இராணியும், ‘தேஷமே முதன்மையானது’ என்று  நடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் யோக்கியதையை கீழ்க்கண்ட இருசம்பவங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
மார்க் ஆண்ட்ரீசன்
மார்க் ஆண்ட்ரீசன்
சம்பவம்-1: மிகச் சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் (TRAI), பேஸ்புக்கின் Free Basics திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது எனக் கூறி தடை செய்தது. இந்த தடைக்குப் பின்னால் இந்திய அறிவுத்துறையினர் காத்திரமான கேள்வி ஒன்றை எழுப்பி போராட்டத்தைக் கட்டியிருந்தனர். அமெரிக்காவின் பேஸ்புக் ‘இணையத்தை காலனியாக்குகிறது’ என்று ஏகாதிபத்திய அரசியலை பேசினார்கள். ஆனால் இணையம் மட்டுமல்ல, இந்தியாவே அப்படித்தான் காலனியாகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
என்னதான் சுதந்திர நாடு என்று சுழன்று ஆடினாலும் ராயல் விக்டோரியன் வகையறாக்கள்தான் இந்திய நாட்டின் இறையாண்மை மீது நொடிக்கொரு தரம் எச்சில் துப்புவர்கள் ஆயிற்றே! பேஸ்புக் போர்டு உறுப்பினர் மற்றும் சிலிக்கான் வேலியிலேயே நம்பர் ஒன் முதலாளி மார்க் ஆண்டிரீசன் “காலனியாதிக்கத்தை எதிர்ப்பது இந்திய மக்களின் பொருளாதாரத்தை பல பத்தாண்டுகளாக பேரழிவிற்கு உள்ளாக்கி வருகிறது. இப்பொழுது ஏன் எதிர்க்க வேண்டும்?” என்று திமிராக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஆண்ட்ரீசன் டுவீட்
மார்க் ஆண்ட்ரீசனின் டுவீட் – “பல பத்தாண்டுகளாக காலனிய எதிர்ப்பு இந்தி மக்களுக்கு பொருளாதார ரீதியாக பேரழிவாக இருந்திருக்கிறது.”
இந்தியா எனும் அடிமைக்கு எதற்காக திடீரென்று இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவேண்டும் என்று ஆண்டீரிசன் கேட்டிருக்கும் பொழுது பாரத் மாதா ஹி ஜெய், வந்தே மாதரம் இன்னபிற கோசம் போடும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் காவிக்கூட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? தேசபக்தி கொஞ்சமாவது இவர்களது இரத்தத்தில் இருந்தால் 56 இஞ்சு மார்பு அவமானத்தில் வெடித்திருக்க வேண்டும் இல்லையா? நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்மிருதி இரானி, பாரதத் தாயிக்காக இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும் இல்லையா? கோவா இளைஞர் பேஸ்புக் பதிவிட்டதற்காக சிறையில் தள்ளும் மோடி கும்பல் இந்தியா அடிமை நாடு என்று டிவிட்டரில் பதிவிடும் ஆண்டிரீசனை ஆளனுப்பி கைது செய்திருக்க வேண்டுமா கூடாதா?
மேற்கண்ட எதுவும் நடக்காது போது டி.ராஜா மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஊளையிட்ட ஹெச்.ராஜா குசு அளவுக்கு கூட அமெரிக்காவை ஏன் எதிர்க்க வில்லை என்று கேட்பது அநியாயம்.
தெருவில் குலைக்கிற நாய்களுக்கு தன் எல்லை எதுவரை என்று தெளிவாக தெரியும். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் சங்கப் பரிவாரத்தின் தேசபக்தி எல்லையும் இத்தகையது தான்.
ஆனால் இந்த எல்லையை உடைத்துதான் அன்றைய இந்தியாவில் ராஜன் லாகிரி, ரோசன் சிங், ராம்பிரசாத் பிஸ்மில், பகத் சிங், அஷ்பகுல்லா கான், ராஜகுரு போன்ற புரட்சியாளர்கள் உயிரை துச்சமென மதித்து தூக்குக் கயிறை நாட்டின் விடுதலைக்காக முத்தமிட்டனர். மறுபுறத்தில் சாவர்க்கர் கூட்டமோ வெள்ளைக்காரனிடம் மண்டியிட்டு இந்து தேசியம் தான் இந்திய தேசியம் என்று பேசிக்கொண்டிருந்தது. இன்றைக்கு இதே காவிக்கும்பல் அமெரிக்க பேஸ்புக் முதலாளி ‘இந்தியா வெள்ளைக்காரனின் அடிமை நாடு’ என்று சொல்லும் பொழுது மண்டியிடுகிறது. மறுபுறத்தில் தேசத்துரோகம் என்று சொந்த நாட்டு மக்களின் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது.
சம்பவம்-2
ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி
மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை மாணவர்கள் முனைப்பாக அம்பலப்படுத்தி வருவதால் தான் சென்னை ஐ.ஐ.டி, ஹைதாராபத் பல்கலைக்கழகம், புனே திரைப்படக் கல்லூரி, ஜே.என்.யூ போன்ற கல்விநிலையங்களை தேசத் துரோகிகளின் கூடாரம் என்று பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு தாக்கி வருகிறது. குறிப்பாக கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மாணவர்களின் கல்வி உதவித் தொகையை இரத்து செய்திருக்கிறது; பல்கலைக்கழக கல்லூரிகளின் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது; ஆய்விற்காக வழங்கப்படும் மானியத்தை நிறுத்தியிருக்கிறது; இதில் காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான ஆராய்ச்சி நிதிகளும் அடங்கும். சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் -ன் விஞ்ஞான் பாரதி முன்னின்று நடத்திக் கொடுத்திருக்கிறது.
தோகா மாநாட்டில் மோடி கும்பல் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரே கல்வித்துறை சீர்திருத்தம் எனும் பெயரில் ஸ்மிருதி இராணியின் கூட்டம் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்து வைத்திருந்தது. பி.ஜே.பி அரசின் இந்த தேசதுரோக நடவடிக்கைகளை மாணவர்கள் பல போராட்டங்களில் வீச்சாக அம்பலப்படுத்தியிருந்தனர். ஜே.என்.யு மாணவர் கண்ணையா குமார் தனது உரையில் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பில் உள்ளவர்களே பாதிக்கப்பட்டார்களா இல்லையா என்பதை மக்கள் முன் பதில் சொல்ல வேண்டும் என்று அவாளது நெஞ்சுக்குலையின் மீது குத்துவிட்டார். இதற்காகத்தான் ஜே.என்.யு மீது கொடூரத்தாக்குதல் நடைபெற்றது என்பது எவர் ஒருவருக்கும் தெரியும். இதில் உதவித்தொகை, ஆராய்ச்சி நல்கை, மானியத்தை இரத்து செய்தல் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் வரை கச்சிதமாக செய்து முடித்த சமார்த்தியசாலி ஸ்மிருதி இராணி 20-02-2015 அன்று புனே இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றும் பொழுது நல்ல ஆராய்ச்சியை குறைவான நிதியிலேயே வழங்க முடியும் என்று வக்கிரமாக பேசினார்.
காசநோய்க்கு செலவு குறைவாகவும், அந்தக் கால பாரதத்தில் விமானம் இருந்தது போன்ற உயரிய ஆய்வுகளுக்கு செலவு அதிகமாகவும் ஆய்வு செய்வதையே ஸ்மிருதி ராணி குறிப்பிடுகிறார். என்ன ஒரு பாசிசத் திமிர்!
– இளங்கோ  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக