வெள்ளி, 18 மார்ச், 2016

இரகசிய விசாரணை.....அப்படி என்னண்ணே அவர் தப்பு பண்ணிட்டார்? Extra Judcial Custody..சட்டம் எங்கே போனது?

விகடன்.com கோவை அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர் அவர். நேற்று அவருக்கு ஒரு போன் கால்.
" ஹலோ அண்ணாச்சி...ஒரு முக்கியமா விஷயம். காதுக்கு வந்துச்சு. சி.எம். கொடநாடு போறாங்களா?
" அப்படி எதுவும் தகவல் வரலையே? "
" சும்மா பொய் சொல்லாதீங்க...அம்மா தனி ஃபிளைட்டுல வந்துட்டாங்கன்னு தகவல் வருது"
" ஏங்க..எனக்குத் தெரியாம அப்படி எதுவும் நடக்காது. நீங்க போனை வையுங்க..கேட்டுச் சொல்றேன்.
அடுத்து அவர் போன் செய்தது உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு,
" ஹலோ சார்...நான்தான் பேசறேன். அம்மா ரகசியமாக வந்திருக்காங்களா?
" அப்படி எதுவும் இல்லையே? மேடம் கார்டன்லதான் இருக்காங்க "
" இல்லைங்க சார்..முக்கியமான நபர் ஒருத்தர் கேட்டார் அதான்..."(என இழுக்க)
" என்ன தகவல் வேணும் உங்களுக்கு? "
" நேத்து தனி ஃபிளைட்ல வந்தது யாருன்னு?  எந்த குற்றவாளியையும் சட்ட விரோதமாக கட்டபஞ்சாயுத்து பாணியில்  அறையில்  பூட்டி வைத்து விசாரிக்க இது என்ன காட்டுமிராண்டிகளின் நாடா? நீதிமன்றம் மனித உரிமை காவலர்கள்  எல்லாம் எங்கே?

" ரொம்ப முக்கியமான விஷயம். உங்களுக்கு மட்டும் சொல்றேன்"
" இரண்டு நாளைக்கு முன்னாடி ஓ.பி.எஸ்ஸும் அவரோட சொந்தக்காரங்க சில பேரும் ஃபிளைட்டுல வந்தாங்க...
" ஓ...அவரைத்தான் சி.எம்னு நினைச்சுட்டாங்க போல...
அப்படித்தான் இருக்கும். அம்மா வந்தா உங்களுக்குத் தகவல் வராமலா?"
" சரிங்க சார்..ஓ.பி.எஸ் எதுக்காக ஃபிளைட்ல வந்தார்? அதுவும் சொந்தக்காரங்களோட? "
" ஓ.பி.எஸ் அம்மாவுக்கு ஜெம் ஆஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்ன்னு சொல்லியிருக்காங்க. அதை மட்டும்தான் சொல்லச் சொல்லியிருக்காங்க. மேற்படி மத்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத வேலை. நெட்வொர்க் எல்லாம் டேப்ல இருக்கு. அவர் வந்தததைக்கூட யாருக்கும் சொல்லாதீங்க...வீண் வம்புல மாட்டிக்காதீங்க..."

"சரிங்க சார்...சரிங்க சார்..."

அடுத்து மன்னார்குடிக்கு போன் போட்டார் அந்தப் பிரமுகர்.

" அண்ணே...ஓ.பி.எஸ் கோவையில இருக்காராமா? "

" கோவைக்கு அவர் போகலை. அவரைக் கூட்டிட்டுப் போயிருக்காங்க..."

" எந்த இடம்? எதுக்காக வந்தார்? "

" அது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். கோவையில் ஓ.பி.எஸ் சில நாள் ரெஸ்ட் எடுக்கணும்னு அம்மா விரும்பறாங்க..அதான்..."

" என்னண்ணே பிரச்னை?"

" அது ரொம்பப் பெரிய விஷயம். அதுவும் ரெண்டு நாள் விசாரணை முடிஞ்சு நேத்து நைட் 11.50க்கு அவரை சென்னைக்கு அனுப்பி வச்சுட்டாங்க"

" அப்படி என்னண்ணே அவர் தப்பு பண்ணினார்? "

" ஏன் தம்பி வேண்டாத வேலை? நமது எம்.ஜி.ஆர்ல கட்டம் கட்டணுமா? "

" மன்னிச்சிருங்கண்ணே......"

டொக்...

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக