சனி, 12 மார்ச், 2016

தேமுதிக அறிவிப்பால் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பால், அதிமுக தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்துள்ளது. மதிமுக, இடதுசாரிகள், விசிக இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்துள்ளன. பாமக தனியாக போட்டியிடுகிறது. தேமுதிகவை எதிர்பார்த்து காத்திருந்த பாஜக அடுத்த கட்டமாக என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறது. திமுக, பாஜ அல்லது மக்கள் நலக் கூட்டணியில் சேரும் என எதிர்பார்த்த தேமுதிக தனித்து போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அறிவித்துவிட்டது.

தேமுதிகவின் இந்த அறிவிப்பு, திமுக, பாஜக மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்கு அதிர்ச்சியை அளித்தாலும், அதிமுக வட்டாரத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் மகளிர் தின விழா கூட்டத்தில் தன் முடிவை அறிவித்ததும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படு கிறது. //tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக