வியாழன், 17 மார்ச், 2016

எம்ஜியார் அதிமுக? அதிருப்தி கோஷ்டி புதுக்கட்சி ? பணம் பத்தும் செய்யும்.....

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்கியதால், அதிமுக கட்சி இரண்டாக பிளவு பட ஜெயலலிதாவே காரணமாக இருக்கப் போகிறார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜெயலலிதா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில், சென்னை மாவட்ட செயலாளர், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்பட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னரே, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத் தமிழ் செல்வனுக்கு, ஓ.பி.எஸ்க்கு பதிலாக கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த ஐவரணி தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சிப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐவர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓ.பி.எஸ் தலைமையில் புதிய கட்சி தொடங்கப் போகின்றனர் என்றும், அந்த கட்சிக்கு எம்.ஜி.ஆர் அதிமுக

என்று பெயரிட முடிவு செய்து இருப்பதாகவும் முழு தகவல்களையும் உளவுத்துறையினர், ஜெயலலிதாவிடம் பட்டியல் போட்டு கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.  எனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என அனைவரையும் கட்சி பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

;அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக மீனவர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ரமேஷ் பதவி பறிக்கப்பட்டது. இவர், ஓபிஎஸ்சின் வலதுகரமாக செயல்பட்டவர். அதேபோன்று சென்னை, வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ, வகித்து வந்த தென்சென்னை தெற்கு மாவட்ட வேளச்சேரி பகுதி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஆகிய ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களது பதவியும் பறிக்கப்பட்டது. அதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலாளர் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. இவர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளர்.

அதிமுக மூத்த அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அதிமுக கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கட்சியைப் பிளக்க நினைக்கும் ஓ.பி.எஸ்ஸின் ஆதாரவாளர்களை கட்சியிலே வைத்திருந்து மாற்று கட்சி உருவாக்கத்தை தடுக்கலாம். ஆனால், ஜெயலலிதா அனைவரும் நீக்குவதன் மூலம் எம்.ஜி.ஆர். அதிமுக செழிப்பாக உருப்பெற அவரே காரணமாய் இருக்கப் போகிறாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது  webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக