திமுகவை தில்லு முல்லு கட்சி என்று பிரேமலதா கூறியதற்கு ஏன் திமுகவில் இருந்து ஒருவரும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை? ஒரு சுயமரியாதை உள்ள உண்மையான திமுக தொண்டன் என்ற முறையில் நான் வேதனை படுகிறேன். நிச்சயமாக விஜயகாந்த் கட்சி பாஜகவுடன் கூட்டணி சேரும் என்றுதான் நம்புகிறேன்.
இந்நிலையில் திமுக மீதான விமர்சனங்கள் தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி கூறியுள்ளதாவது:
இந்நிலையில் திமுக மீதான விமர்சனங்கள் தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி கூறியுள்ளதாவது:
விஜயகாந்த்-பிரேமலதா திருமணத்தை இதே மதுரையில் தலைவர்தான் நடத்தி வைத்தார். நான்தான் முன்னின்று ஏற்பாடுகளையெல்லாம் செய்தேன்.
திமுகவை தில்லு முல்லு கட்சி என்றெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க தேமுதிகவுக்கு, பிரேமலதாவுக்கு தகுதியே இல்லை.
இந்த விமர்சனத்துக்கு திமுகவில் இருந்து ஏன் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
திமுகவில் கருணாநிதியை ஏமாற்றி பதவியை அனுபவிக்க நினைப்பவர்கள்தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தினரின் அராஜகத்தால்தான் விஜயகாந்த், திமுகவுடனான கூட்டணிக்கு வரவில்லை.
திமுகவுடன் விஜயகாந்த் பேரம் நடத்திப் பார்த்தார்.. அது நடக்காததால் தனித்துப் போட்டி என அறிவித்திருக்கிறார். தற்போது வேறு ஒரு கட்சியுடன் பேரம் பேசி முடித்துவிட்டார். ஓரிருநாட்களில் அதுவும் தெரிந்துவிடும்.
தேமுதிக தலைமையிலான கூட்டணியில் விரைவில் பாஜக இணைந்துவிடும்.
இவ்வாறு மு.க. அழகிரி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக