வியாழன், 31 மார்ச், 2016

அழுது புரண்ட தேமுதிக தொண்டர்கள்.....ம.ந.கூட்டணியில் விஜயகாந்த் ஏன் சேர்ந்தார்? கட்சிகாரர்கள் போர்க்கொடி!

சென்னை: விஜயகாந்த்தை, திமுக தரப்பில் இருந்து தயாநிதி மாறன் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என்று தேமுதிகவில் இருந்து பிரிந்து, திமுகவில் இணைந்த யுவராஜ் தெரிவித்துள்ளார். தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக தலைமை தொடர்ந்து முயன்று வந்தது. திரைமறைவில் நடந்த பேச்சுகள் மூலம், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன. விஜயகாந்த் தங்கள் பக்கம்தான் சாய்வார் என்று நினைத்துதான், திமுக தலைவர் கருணாநிதி இறங்கி வந்து, பல முறை, தேமுதிகவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார். 'பழம் நழுவி பாலில் விழும்' என்றெல்லாம் பேசினார்
விஜயகாந்த்துடன் பேச்சு பேச்சுவார்த்தை உச்சகட்டத்தில் இருந்தபோது, சென்னைக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் வைத்து ஊடக அதிபர் கலாநிதி மாறன், விஜயகாந்த்துடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் இருந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
சீட்டுகள் இறுதி கலாநிதி மாறன் 63 தொகுதிகள் கொடுக்க முன் வந்ததாகவும், ஆனால் விஜயகாந்த், தனது ராசி எண்ணான 5 வர வேண்டும் என்பதற்காக 59 சீட்டுகள் பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ம.ந.கூவில் ஐக்கியம் அதேநேரம் தேமுதிக தலைமை, மறு பக்கத்தில், பாஜக மேலிட தலைமையுடனும் தொடர்பில் இருந்தது. இரண்டில் ஒன்றை, அக்கட்சி தேர்ந்தெடுக்கும் என்கிற கணிப்புகள், அரசியல் வட்டாரத்தில் வலம் வந்தன. ஆனால் வைகோ உருவாக்கிய மக்கள் நல கூட்டணி அணியில் திமுக இணைந்துவிட்டது.
பொய் அல்ல ம.ந.கூவுடன், தேமுதிக கூட்டணி வைத்ததன் மூலம், கலாநிதி மாறனுடன், விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய் என்ற கருத்து பரவியது. அது பொய் அல்ல, ஓரளவுக்கு உண்மை என்று, சமீபத்தில் திமுகவில் இணைந்த வட சென்னை தேமுதிக முன்னாள், மாவட்ட செயலாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை அறிந்த யுவராஜ் யுவராஜ் நேற்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். விஜயகாந்தின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும் அளவுக்கு தேமுதிகவில் செல்வாக்குடன் இருந்தார். விஜயகாந்த்துக்கு டாக்டர் பட்டம் கிடைப்பதில் யுவராஜ் பங்கு அதிகம். எனவே தேமுதிக நடவடிக்கைகள் குறித்து அவருக்கு நல்ல பரிட்சையம் உண்டு.
தயாநிதியை சந்தித்தார் யுவராஜ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனித்துப் போட்டி முடிவை அறிவிப்பதற்கு, ஒரு வாரத்திற்கு முன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை, விஜயகாந்த் சந்தித்து பேசிவிட்டு வந்தார். அதை அறிந்து, நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.
அழுது புரண்டனர் ஆனால், மக்கள் நலக் கூட்டணியில், தேமுதிக இணைந்த செய்தி கேட்டு, நிர்வாகிகள் பலரும் அழுதே விட்டனர். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி வைத்து விட்டாரா என, தொண்டர்கள் கேட்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இவ்வாறு யுவராஜ் தெரிவித்துள்ளார். விஜயகாந்த்தை சந்தித்தது கலாநிதி இல்லை, தயாநிதி என்று யுவராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக