ஸ்டாலின் மனதில் என்னதான் நினைத்துகொண்டு இப்படிஎல்லாம் நடக்கிறார்? என்ன தம்பி இப்படி பண்றீங்களே என்று உள்வீட்டில் பலரும் கொஞ்சம் உரக்கவே விவாதிக்கிறார்கள். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை பல இடங்களில் மூன்றாவது இடத்து அழைத்து சென்றார். குஷ்பூவை கலைத்து விட்டு காங்கிரசுக்கு வைட்டமின் கொடுத்தார். இப்போ காதர் முஹிதீனையும் ஒரு வழிபண்ண பார்த்தார். ஆனால் கலைஞர் அந்த ஆபத்தில் இருந்து திமுகவை காப்பாற்றி விட்டார் என்று சில குருவிகள் கூவுகின்றன. கலைஞரின் நீண்ட நாள் நண்பரான,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காதர் மொய்தீனிடம், 'ஒரு சீட் தான்
கிடைக்கும். வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் தாராளமாக
போகலாம்' என, ஸ்டாலின் தரப்பினர் கறாராக பேசியதாக கூறப்படுகிறது.
கருணாநிதிக்கு
இந்த தகவல் கிடைக்கவே, துக்கமடைந்த அவர், காதர் மொய்தீனை அழைத்து,
'உங்களுக்கு எவ்வளவு சீட் வேண்டும் சொல்லுங்கள்' என்றாராம். 'ஐந்து சீட்
போதும்' என்று சொன்ன காதர் மொய்தீனிடம், உடனடியாக ஒரு தாளில், 'ஐந்து சீட்
ஒதுக்கப்பட்டது' என்று எழுதிக் கொடுத்தார்.ஏற்கனவே, கே.ந.கூ.,வால்
எரிச்சலில் இருந்த கருணாநிதியை, ஸ்டாலினுக்கு செக் வைக்க, காதர் மொய்தீன்
சம்பவம் துாண்டியது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக