செவ்வாய், 15 மார்ச், 2016

சீட் வேண்டாம்; பணத்தை கொடுங்கள்!' தே.மு.தி.க.,வில் திடீர் நெருக்கடி

தினமலர்.com :தனித்து போட்டியிட்டால், வெற்றி பெற முடியாது என கருதும், தே.மு.தி.க.,வினர், 'சீட்' கேட்டு செலுத்திய பணத்தை திரும்ப கேட்டு, கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி விட்டனர். கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணைந்து, 14 இடங்களில் போட்டியிட்டு, தே.மு.தி.க., அனைத்திலும் தோல்வி அடைந்தது.இதனால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என, தே.மு.தி.க.,வினர் விரும்பினர்; அதை, கட்சித் தலைவர் விஜயகாந்திடமும் வலியுறுத்தினர்.அதை ஏற்ற விஜயகாந்த், தி.மு.க., - பா.ஜ., மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட பல தரப்பினரிடமும் பேச்சு நடத்தி வந்தார். ஆனால், கட்சியினரில் பெரும்பாலானோர், தி.மு.க.,கூட்டணியை விரும்பினர்; இதை, விஜயகாந்தும் ஆமோதித்தார்.  அவசரபடாதீங்கோள் சுப்பிரமணியம் சாமி ஏதாவது ஐடியா வச்சிருப்பார்....நன்னா மறுபடியும் ஒரு குவாட்டர்..... 


இந்நிலையில், கடந்த, 10ம் தேதி, சென்னை, ராயப்பேட்டையில் நடந்த கட்சியின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய காந்த், தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் என, அதிரடியாக அறிவித்தார். இதனால், கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.முன்னதாக, தி.மு.க., கூட்டணி நிச்சயம்
என கருதி, தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் விருப்ப மனு கொடுத்தனர். தலைமை விரும்பியபடி, பல லட்சம் ரூபாயை தேர்தல் நிதியாக வழங்கினர். தி.மு.க., கூட்டணி இல்லை என்றால், தோல்வி உறுதி என்ப தால், மீண்டும் பணத்தை கேட்டு, கட்சித் தலைமையிடம், அவர்கள் நெருக்கடி கொடுக்க துவங்கிஉள்ளனர். நிதியளிப்பின் போது, கட்சி மாநில நிர்வாகிகளோடு, மாவட்ட செயலர்களும் இருந்தனர். அதனால், கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டு, ஆங்காங்கே, மாவட்ட செயலர்களை நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில், தனித்து போட்டி என, விஜயகாந்த் அறிவித்த பின், விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன், 13ம் தேதிமாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார்.இந்த கூட்டத்தில், பண விவகாரம் வெடிக்கும் என்பதை அறிந்த வெங்கடேசன், கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்து விட்டு, சென்னை வந்து விட்டார். இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களிலும், மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு, நிதி தொடர்பாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது: தனித்து போட்டியிடும் முடிவை கட்சியினர் எதிர்பார்க்கவில்லை. தனித்து போட்டியிட்டால், தோல்வி உறுதி. தி.மு.க., தவிர்த்து, மற்ற கூட்டணி குறித்து அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.அதனால், கட்டிய பணத்தை திரும்ப பெற வேண்டும் என விரும்புகின்றனர். பணத்தை தரவில்லை என்றால், சிலர் போலீசில் புகார் தரவும் முடிவு செய்துள்ளனர். மேலும், சிலர், கட்சி பணியை மூட்டை கட்டிவிட்டு, பிழைப்பை பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக