செவ்வாய், 29 மார்ச், 2016

ஐஸ்வர்யா(காக்கா முட்டை ) : தமிழகத்தில் தமிழ் பேசும் நடிகைக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை.....ஏன்?

காக்கா முட்டை படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ஐஸ்வர்யா. வளர்ந்து வரும் போதே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், குப்பத்து பெண்ணாகவும் நடித்து கலக்கியவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தமிழகத்தில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பே தருவதில்லை’ என கூறினார். இதன் மூலம் ஒரு சில முன்னணி நடிகைகளை இவர் நேரடியாகவே தாக்கியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.
ஹன்சிகா, தமன்னா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகளுக்கு இன்றும் டப்பிங் தான் பேசப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  cineulagam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக