சனி, 26 மார்ச், 2016

ஜெயா டிவிதான் விஜயகாந்த் + வைகோ கூட்டணி செய்தியை முதலில் வெளியிட்டது.....

திடீர் திடீரென மாற்றங்களை சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த மாற்றம் நடந்தாலும் அதைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகிறது நக்கீரன். அந்த வரிசையில் மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. இணைந்து கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என பெயர் மாற்றம் செய்து வைகோ அறிவித்த சில மணி நேரங்களில் அதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கண்டறிய ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் நக்கீரன் சர்வே படை களமிறங்கியது. "ஓ... அதுவா... இந்தக் கூட்டணி பற்றி மற்ற டி.வி.க்களில் வருவதற்கு முன்பே ஜெயா டி.வி.யில் செய்தி வந்துவிட்டது. பொதுவாக மற்ற கட்சி நியூஸை ஜெயா டி.வி.யில் காட்ட மாட்டாங்க. "விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேருகிறார்.. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்' என உடனே ப்ளாஷ் நியூஸ், லைவ் கவரேஜ்னு ஜெயா டி.வி. அ.தி.மு.க. நியூஸ் மாதிரி வெளியிட்டாங்க.
இந்தக் கூட்டணி உருவானது இங்கே இருக்கிற அ.தி.மு.க. காரங்களுக்கு உற் சாகத்தை அதிகரித் திருக்கிறது'' என வெள்ளந்தியாக பதிவு செய்தார் தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த கிராமத்து விவசாயி ராமசாமி.

>விஜயகாந்த்தை ‘கிங்காக களமிறக்கியிருக்கும் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி எனத் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வேயின் முடிவுகளைத் தொகுத்தபோது மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. இணைந்து கூட்டணி அமைத்ததை 26% மக்கள் வரவேற்கிறார்கள். "இந்தக் கூட்டணி எந்த விளைவையும் ஏற் படுத்தாது', "இது வெற்றி பெறாது, விஜயகாந்த் எடுத்தது தவறான முடிவு' எனச் சொல்வோரின் மொத்த எண்ணிக்கை 74 சதவிகிதம்.

தனித்துப் போட்டி எனத் தெரிவித்திருந்த விஜயகாந்த்தின் கூட்டணி அறிவிப்பால் யாருக்கு லாபம் என்பதையும் தெளிவாகவே மக்கள் சொல்லியிருக்கிறார்கள். ""விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலும், அவர் கிங் அல்ல. அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான கிங் மேக்கர்தான்'' என்கிறார் தென்சென்னை கே.கே.நகரை சேர்ந்த கிரிதரன். ""இந்தக் கூட்டணி அமைந்ததே அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்கதான் என்று நினைக்கிறேன்'' என்கிறார் கோவையைச் சேர்ந்த பிரபாவதி. 

>தே.மு.தி.கவின் இந்த முடிவு, தமிழகத் தின் இருபெரும் கட்சிகள் தலைமையிலான அணியில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை முன்வைத்திருந் தோம். "இந்தக் கூட்டணியால் அ.தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும்' என 29 சதவிகிதம் பேரும் "இதனால் தி.மு.க.விற்கு பலவீனம்' என 30 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவிக் கிறார்கள். ஆக ஏறத்தாழ 59 சதவிகித தமிழக மக்கள், "விஜயகாந்த்தின் கூட்டணி முடிவால் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பு தடுக்கப்படும்' என்கிறார்கள். இதற்கு எதிர்நிலையான கருத்தும் மக்களிடையே இருக் கிறது."தி.மு.க.வை எப்பவும் எதிர்க்கும் வைகோவுக்கு வேண்டு மானால் இந்தக் கூட்டணி அமைஞ்சது சந்தோஷத்தை தருமே தவிர, களத்தில் அந்தக் கூட் டணிக்கு வெற்றியைத் தராது. கடந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெற பெரிதும் உதவியது தே.மு.தி.க. ஓட்டுதான். இந்த முறை அந்த ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக் காது. அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருக்குது. அந்த ஆட்சி யை நீக்கணும்னு நினைக் கிற மக்கள் ஜெயிக்குற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க. அப்படிப் பார்த்தால், இந்தக் கூட் டணியைவிட தி.மு.க.வுக் குத்தான் ஓட்டுப் போடு வாங்க'' என்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த கணேசன்.">அவர் சொன்னதைப் போல "இந்தக் கூட்டணி அ.தி.மு.க.விற்கு பலவீனம்' ஏற்படுத்தும் என 14% பேரும், தி.மு.க. எளிதில் வெற்றி பெற இந்தக் கூட்டணி உதவும் என 18% பேரும் என மொத்தம் 32 சதவிகித மக்கள் நினைக் கிறார்கள். இப்படி பலவிதமாக கருத்து சொன்ன மக்களிடம், "விஜயகாந்த்துடன் இணைந்த மக்கள் நலக்கூட்டணி  ஆட்சி யைப் பிடிக்குமா' என்ற கேள்விக்கு, அவர்களில் 9 சதவிகிதம் பேர் மட்டுமே "ஆட்சி அமைக்கும்' என கருத்தை தெரிவித்தார்கள். 

>கடந்த முறை தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் சொன்னபோது நக்கீரன் எடுத்த சர்வேயில், அவரது முடிவு மாறும் என பலரும் நம்மிடம் சொன்னார்கள். தனது முடிவை மாற்றி, கூட்டணி அமைத் ததை சென்னை போன்ற பெருநகர மக்கள் வரவேற்கிறார்கள். தே.மு. தி.க. வலுவாக உள்ள வட மாவட் டங்களில் தலித் மக்களின் வாக்கு களை இந்த கூட்டணி ஒன்று சேர்க்கும் என 26 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகத்தில்   15 சதவிகித மாக இருக்கும் இந்த கருத்து வட தமிழகத்திற்கு வரும் பொழுது 11 சதவிகிதம் கூடுதல் வலுவைப் பெறுகிறது. விஜயகாந்த் அமைத்துள்ள கூட்டணி வட தமிழகத்தில் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும் என நினைக்கும் மக்களிடம், "இது பா.ம.க.விற்கு போட்டியாக அமையுமா' என கேட்டதற்கு, வட மாவட்ட மக்களில் 17 சதவிகித மக்கள் "ஆம் போட்டியாக அமையும்' என கருத்துக் கூற, ஒட்டுமொத்த தமிழக மக்கள் திரளில் 13 சதவிகிதம் பேர் அதே கருத்தை எதிரொலித்தனர்.விஜயகாந்த்தின் இந்த முடிவால் தே.மு.தி.க.  பலப்படுமா? பலவீனப் படுமா? என கேட்டதற்கு "பலப்படும்' என 17 சதவிகிதம் பேரும் "பல வீனப்படும்' என 25 சதவிகிதம் பேரும், சொல்கிறார்கள். அதே நேரத்தில், விஜயகாந்த்தின் முடிவால் 4 கட்சி கூட்டணியாக இருந்து வந்த மக்கள் நலக் கூட்டணி இப்போது வலுப்பெற்றுள்ளதாக 30 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.>புதிய சக்தியாக உருவாகியுள்ள கேப்டன் விஜயகாந்த் அணி, வெற்றி பெறுமா என்பதைவிட இரு பெரும் கட்சிகளில் எதனுடைய வெற்றியைத் தடுக்கப்போகிறது என்பதுதான் தமிழகம் தழுவிய எதிர்பார்ப்பாக உள்ளது.-நக்கீரன் சர்வே படை  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக