புதன், 16 மார்ச், 2016

விஜயகாந்தின்...திமுக கூட்டணி டிராமா....ஏமாந்த தேமுதிகவினர் திமுகவுக்கு படையெடுப்பு

 விஜயகாந்த் திமுகவோடு கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த் தேமுதிக தொண்டர்கள் பலர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சட்டசபை தேர்தலை சந்திக்க விஜயகாந்த கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிய போது, திமுகவோடு பேரம் படிந்ததால், ஏறக்குறைய கூட்டணி முடிவாகிவிட்டது போன்ற ஒரு தோற்றம் உருவானது. இதனால் மகிழ்ச்சியடைந்த தேமுதிக தொண்டர்கள் ஏராளமானோர், நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.எல்.ஏ சீட் கேட்டு மனு கொடுத்தனர்.>ஆனால் தேமுதிக மகளிர் அணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த, தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது அது அந்த கூட்டத்திலேயே வெளிப்பட்டது. வழக்கமாக விஜயகாந்த் எதாவது முக்கிய முடிவை அறிவித்தால் ஆர்ப்பரிக்கும் அவரது தொண்டர்கள், தேமுதிக தனித்துப் போட்டி என்றதும் எந்த கரகோஷமும் எழுப்பவில்லை.


எனினும் விஜயகாந்த் தன்னுடைய முடிவில் உறுதியாகவே இருக்கிறார். இந்நிலையில் தொண்டர்களின் அதிருப்தி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனால் மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கலாமா என விஜயகாந்த் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், விஜயகாந்த் அறிவிப்பில் ஏமாற்றம் அடைந்த  கீழ்மட்ட நிர்வாகிகள் வேறு கட்சிக்கு மாறுவது என  முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அவர்களில் பலர் திமுகவில் இணைய அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

திமுகவும் அவர்களை வரவேற்க தயாராகவே இருக்கிறது. அதன்படி ராமநாதபுரம் தேமுதிக நிர்வாகியால செயல்பட்டு வந்த பிரபல தொழிலதிபர் சிங்கம் பஷீர் நேற்று திமுகவில் இணைந்தார்.">இதுபற்றி அவர் கூறும்போது “தனித்துப்போட்டி என்ற விஜயகாந்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த எம்.ஜி.ஆரே கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்தித்தார்.

விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்றுதான் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்தது, தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணலில் கலந்துகொண்டு விருப்பமனு கொடுத்த பலர் தங்கள் பணத்தை திரும்ப பெறும் மனநிலையில் உள்ளனர்.  எனவே நான் திமுகவில் இணைவது என்று முடிவெடுத்தேன். என்னைப்போலவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5 ஆயிரம் தொண்டர்கள், முன்னாள் திமுக அமைச்சர் பெரிய கருப்பன் முன்னிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளோம்” என்று கூறினார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக