வியாழன், 24 மார்ச், 2016

பெல்ஜியத்தில் காணமல் போன இந்தியர் இறுதியாக மெட்ரோ ரயில் இருந்து பேசியுள்ளார்

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் குண்டுவெடிப்பு தாக்குதலின் போது காணாமல் போன இன்போசிஸ் ஊழியர், கடைசியாக மெட்ரோ ரயிலில் இருந்து செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். பிரஸெல்ஸில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த அன்று முதல் காணாமல் போன பெங்களுருவைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷைத் தேடும் பணிகள் இந்திய தூதரகம் மூலம்  நடந்து வருகின்றன.

அதன்படி, அவர் கடைசியாக பிரஸ்ஸெல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "ராகவேந்திரான் கணேஷ் செல்போனில் பேசிய பதிவின் அடிப்படையில், அவர் கடைசியாக பிரஸ்ஸெல்ஸில் இருந்துள்ளார். அவர் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது செல்போனில் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.
ராகவேந்திரன் கணேஷைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அதே போல, குண்டு வெடிப்பில் காயமடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களான நிதி சபேகர் மற்றும் அமித் மோத்வானி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாக சுஷ்மா கூறினார்  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக