வெள்ளி, 25 மார்ச், 2016

JNU கண்ணையா குமார் மீது செருப்பு வீச்சு....ஹைதராபாத் பல்கலை கழக


ஹைதராபாத் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று, மாணவர் தலைவர் கண்ணையா குமார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய காரணத்தினால் ரோஹித் பல்கலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் வெதும்பிய ரோஹித் வெமூலா தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு காரணம் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணிதான் என்று, பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மிரிதி ராணி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு மாத விடுமுறைக்குப் பின்னர் பல்கலையின் துணை வேந்தர், மீண்டும் பல்கலை வந்ததாகத் தெரிய வருகிறது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அதோடு நேற்று கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்ற வந்த கண்ணையா குமார், கல்லூரியில் நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது பேசிய கண்ணையா குமார் ரோஹித் வெமூலாவின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், பல்கலைக் கழக மாணவர்கள் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகாத வகையில் ரோஹித் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் கண்ணையா குமார் தெரிவித்துள்ளார். maalaimalar.ocm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக