வெள்ளி, 18 மார்ச், 2016

இலங்கை தமிழர்களின் கால்களை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு உடைத்தார்...கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் அக்கிரமம்

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர். இவர்களில் சுபேந்திரன், கண்ணன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர்  டில்லிபாபு, அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விசாரணை என்ற பெயரில் அவர்கள் இருவரிடமும் கடுமையாக கடந்து கொண்டார்.இதில் சுபேந்திரனின் இரண்டு கால்களும் செயல்பட முடியாத அளவில் உடைக்கப்பட்டது. கண்ணனுக்கு உடல் முழுதும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் மீண்டும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.;மேற்கண்ட தகவலை17.03.2016  வியாழக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாரதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் அருண் பாரதி ஆகியோர் தெரிவித்தனர்.;மேலும், சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபுவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும்.
மதுரை அருகே உச்சம்பட்டி முகாமின் இலங்கைத் தமிழ் அகதி ரவீந்திரனைத் தற்கொலைக்குத் தூண்டிய வருவாய்த் துறை அதிகாரியை கைது செய்து, குற்ற வழக்கு தொடர வேண்டும்.
இலங்கைத் தமிழ் அகதிகளை நடைமுறையில் குற்றப் பரம்பரையாக நடத்துவதைத் கைவிட வேண்டும். அவர்களின் மனித உரிமைகளுக்கும் கண்ணியத்துக்கும் தக்க மதிப்பளிக்க வேண்டும். தமிழ்நாட்டு இலங்கை தமிழ் அகதி முகாம்கள் மீதான வருவாய்த் துறை, உளவுத்துறை, கியூ பிரிவுக் காவல்துறைக் கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இடைக்கால இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இந்திய அரசு திபெத் உள்ளிட்ட பிற நாட்டு அகதிகளோடு ஒப்புநோக்கின் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை கைவிட வேண்டும்.

;தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறை முகாம்களாக இயங்கி வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை மூட வேண்டும். ஒரு சில தொண்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் முகாம்களுக்குள் சென்று இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவக் கூடாது என்ற இப்போது நடைமுறையில் இருக்கும் தடையை நீக்க வேண்டும்.

;இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை, தன்னுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அகதிகளுக்கு உறுதி செய்ய வேண்டும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் உரிய பங்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.படங்கள்: அசோக்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக