புதன், 30 மார்ச், 2016

திருநாவுக்கரசர் : எமக்கு தரவேண்டிய தொகுதிகளை குறைக்க கூடாது...தமாக சேர்ந்தாலும்.....?

டெல்லி: திமுக அணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா. சேருவதில்லை பிரச்சனை இல்லை; அதற்காக காங்கிரஸ் கட்சியின் தொகுதிகளை குறைக்கக் கூடாது என்று அக்கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. த.மா.கா.வும் வரக் கூடும் என்பதால் காங்கிரஸ் தொகுதிகளைக் குறைப்பதாக திமுக கூறி வருகிறது. Cong. demands more seats in DMK allaince ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர், திமுக கூட்டணியில் தமாகா சேர்ந்து அக்கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை; ஆனால் எங்களுக்கான தொகுதிகளை குறைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

Read mor//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக