'தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேராததால் ஏற்பட்டுள்ள
தொய்வை, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் சரிசெய்ய
முடியும்' என, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
சட்டசபை
தேர்தலில், தே.மு.தி.க., தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது.
இதனால், பெரிதும் ஏமாற்றம் அடைந்த கட்சியாக, தி.மு.க., உள்ளது.
அ.தி.மு.க.,வை எதிர்த்து வெற்றி பெற, தே.மு.தி.க., கூட்டணி அவசியம் என
எதிர்பார்த்திருந்த, இக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூட்டணி பலம்
இல்லாமல், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளதால், தி.மு.க.,வினர் மத்தியில் சோர்வும், கட்சியின் தேர்தல்
பயணத்தில் தொய்வும் ஏற்பட்டுள்ளது. கண்டு பிடிசான்யா கொலம்பஸ்! கழகத்தின் மீதுதான் தினமலருக்கு என்ன ஒரு பாசம் பரிவு?
இதை சரிக்கட்ட, பொருளாளர் ஸ்டாலினை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் யோசனை கூறுகின்றனர்.
இதை சரிக்கட்ட, பொருளாளர் ஸ்டாலினை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் யோசனை கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கூட்டணி சேர கட்சிகள்
முன்வராது என்ற காரணத்திற்காகவே, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க,
கட்சி தலைமை தயக்கம் காட்டியது; இனி, அந்த பிரச்னை
இல்லை. காங்கிரசை தவிர வேறெந்த கட்சியும், தி.மு.க., கூட்டணியில் சேரப்
போவதில்லை. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க, காங்கிரசார்
எதிர்ப்புதெரிவிக்கப் போவதும் இல்லை. மேலும், பா.ம.க., தரப்பில்
அன்புமணியையும், தே.மு.தி.க.,வில் விஜயகாந்தையும், முதல்வர் வேட்பாளராக
முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்க போகின்றனர். அவர்களுக்கு போட்டியாக,
களத்தில் ஸ்டாலின் நிற்பது தான் பொருத்தமாக இருக்கும்; கட்சிக்கும்
இளரத்தம் பாய்ச்சுவதாகவும் அமையும். கட்சி சார்பற்ற இளைஞர்களின் ஆதரவை பெற,
தி.மு.க.,வுக்கு இந்த ஒரு வழி மட்டுமே இருப்பதாக கருதுகிறோம். தேர்தலுக்கு
பின், ஸ்டாலினை முதல்வராக்க வாய்ப்புகள் இருப்பதை, தி.மு.க.,வினர் யாரும்
மறுக்கவில்லை. அதற்கு, கட்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலை தான், எங்களை
போன்றவர்களுக்கு இருக்கிறது.இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.
தொகுதி பங்கீடு பேசுவதற்கு தி.மு.க.,வில் நால்வர் அணி:
தொகுதி
பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்கு, தி.மு.க., பொருளாளர்
ஸ்டாலின் உட்பட, நான்கு பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.சென்னை,
கோபாலபுரம் வீட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர்
அன்பழகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்,
நேற்று காலை நடந்தது.இக்கூட்டத்தில் கூட்டணி விவகாரம், தேர்தல் அறிக்கை
தயாரிப்பு பணிகளை முடிப்பது, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி
பேசுவதற்கு குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதை தொடர்ந்து,
கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், கட்சிகளுடன் பேசுவதற்கு,
தி.மு.க., சார்பில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி,
ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆலந்துார் பாரதி ஆகியோர் கொண்ட
நால்வர் அணி நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, கட்சியின் பொதுச்
செயலர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com
சாப்ட்வேர் ட்ரைனிங் விதேஒஸ் இன் தமிழ்
பதிலளிநீக்குSoftware Training Videos In Tamil
http://goo.gl/pPk30v