வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
டெல்லி யமுனை ஆற்றங்கரையில் தற்காலிக கட்டுமானங்கள் எழுப்பி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, உலகப் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏற்று, 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. அந்தக் குழு வாழும் கலை அமைப்புக்கு 120 கோடி ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரைத்தது.
இதுகுறித்த விசாரணையின்போது, வாழும் கலை அமைப்புக்கு 5 கோடி ரூபாயும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாயம், உலக பண்பாட்டு திருவிழா நடத்த அனுமதி அளித்தது nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக