திங்கள், 28 மார்ச், 2016

தேமுதிக வானிலை :வரும் 48 மணி நேரங்களில் மேகங்கள் கலைந்து சென்று பரவலாக திமுக அதிமுக பிரதேசங்களில்....கடுமையான இடி முழக்கத்துடன் கூடிய... .

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. ஆனால் தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி வென்ற பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அதிமுக ஆதரவாளர்களாக மாறினர்.  கடைசியில் அவர்கள் அதிமுகவின் உறுப்பினர்களாகவே மாறிப் போயினர். இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையே தேமுதிக இழந்தது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்திருக்கிறது. இது திமுகவை மட்டுமல்ல தேமுதிக நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு தாவி வருகிற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்களை கணிசமாக அந்த கட்சியையே இரண்டாக உடைக்கவும் திமுகவில் சேர முயற்சி  மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக சென்னையில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும் செய்திகள் பரவுகின்றன. இதேபோல் அதிமுக தரப்பும் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை வளைக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டும் நிலையில் தேமுதிகவை இரண்டாக உடையும் நிலை ஏற்படும். அதன் முரசு சின்னம்  முடங்கும் ஆபத்தை எதிர்நோக்கும்  தேமுதிக தலைமை அதிர்ச்சியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக