செவ்வாய், 15 மார்ச், 2016

JNU இல் இருந்து கன்னையா குமார் மற்றும் 4 பேரை வெளியேற்ற பரிந்துரை

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்த பல்கலை உயர்மட்ட குழு, கன்னையா குமார் மற்றும் 4 பேரை பல்கலையை விட்டு வெளியேற்ற பரிந்துரை செய்துள்ளது.கடந்த பிப்ரவரி 9ம் தேதி அப்சல் குரு நினைவு தினத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த கடந்த 10ம் தேதி குழு ஒன்றை துணைவேந்தர் அமைத்தார். பின்னர் அடுத்த நாள்(11ம் தேதி) இந்த குழு உயர்மட்டக்குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை அளிக்க இரண்டு முறை ( பிப்., 26 மற்றும் மார்ச் 3) கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் 11ம் தேதி இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.  ஆம் ஆத்மிக்கு ஒரு புதிய தலைவர் கிடைத்துவிட்டார்... கேஜ்ரிவால் டில்லி முதல்வர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு கண்ணையாவிடம் அந்தப்பதவியை ஒப்படைத்துவிட்டு பிரதமர் பதவிக்கு குறி வைக்கலாம்....


இந்த அறிக்கையில் 21 மாணவர்கள் தவறு செய்துள்ளதாகவும், மாணவர்கள், பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்தி, பல்கலையின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழுவின் பரிந்துரையை தொடர்ந்து, துணைவேந்தர் தலைமையில், கூடி ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா மற்றும் இரண்டு மாணவர்களை பல்கலையை விட்டு வெயேற்ற வேண்டும் என ஜேஎன்யு அமைத்த உயர் மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யவும், சில மாணவர்களுக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல்கலையிலிருந்து வௌியேற்றப்படும் மாணவர்கள், தொடர்ந்து படிக்க தடை விதிக்கப்படும். சஸ்பெண்ட் செய்யப்படும் மாணவர்கள், விடுதியை விட்டு வௌியேற்றப்படுவார்கள் எனவும், இது குறித்த இறுதி முடிவை நன்கு ஆய்வு செய்த பின்னர் துணைவேந்தர் ஜெக்தீஸ் குமார் மற்றும் மாணவர்களிடம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் தலைமை அதிகாரி திம்ரி ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக