ஞாயிறு, 20 மார்ச், 2016

மாடு விற்க சென்ற 2 இஸ்லாமிய சிறுவர்கள் கொலை...ஜார்கண்டில் சங்பரிவார் வெறியாட்டம்

மாடு விற்க சென்ற இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிய சேர்ந்த முகம்மது மஜ்லு(35) மற்றும் அசத் கான்(15) ஆகிய இருவரும் தங்களிடம் இருந்த 8 எருமை மாடுகளை விற்பனை செய்வதற்காக சந்தைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் லத்தஹார் மாவட்டம் ஜாபார் எனும் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில், கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு பிணாமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக