சனி, 26 மார்ச், 2016

வைகோ : 2ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் .

2ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் . வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளசதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  திமுக சார்பில் நேற்று இரவு எனக்கு தாக்கீது கொடுக்கப்பட்டிருக்கிறது. கூறிய வார்த்தையை திரும்பப் பெறவில்லை எனில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. என் மீது வழக்குத் தொடர்ந்ததற்கு மகிழ்ச்சி.
ஏற்கெனவே 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தேன்.
அதைத் தொடர்ந்து என் மீது அவதூறு வழக்குப் போட்டப்பட்டது. வழக்குப் போட்டவர்கள் வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல ஈழத்தில் நடப்பது என்ன என்று பேசியதற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் என்மீது தேச துரோக வழக்குப் போடப்பட்டது. பிரிவு 124 ஏ-ன் கீழ் வழக்குப் போட்டப்பட்டிருப்பதால் சட்டத்தின் படி எனக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம். இந்த வழக்கில் சாட்சிகள் கூட விசாரிக்கப்பட்டுவிட்டன. ஒருபோதும் நான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெற மாட்டேன்.
பொடா வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதியிடம் நான் நேற்றும் எல்.டி.டி.யை ஆதரித்தேன், இன்றும் ஆதரித்தேன், நாளையும் ஆதரிப்பேன் என்று கூறியவன் நான். அதனால் இந்த வழக்கைக் கண்டு அஞ்சப்போவதில்லை.
கூட்டணி குறித்து ரூ.500 கோடி திமுக பேரம் பேசியதாக நான் கூறியதைத் தொடர்ந்து எனக்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியதுகூட திமுக தலைவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்ப்பில்லை, அவர் வழக்குப் போட நினைத்திருக்க மாட்டார்.
எங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கு பேரவைத் தேர்தலில் வாய்ப்பு, பணம் தருகிறேன் எனக் கூறி மதிமுகவைச் சேர்ந்தவர்களை திமுகவில் சேர்த்தனர். கருணாநிதிக்குத் தெரியாமல் எல்லாம் நடக்கிறது என்று நான் புகார் தெரிவித்த பின்னர், 3 நாள்கள் கழித்து திமுகவில் எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என கருணாநிதியை அறிக்கை விட வைத்தனர். இந்த விஷயத்திலும் அதுபோன்ற நிகழ்வு நடைபெற வாய்ப்ப்பிருக்கிறது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி ஆடு ஆக்கப்பட்டிருக்கிறார். கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்தினர் திரைமறைவில் பதுங்கிக் கொண்டனர்.
ஷாகித் பாவ்லா சென்னை வந்து மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது என்ன பரிமாற்றம் நடந்தது. கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட டிடி. யாரிடம் கொடுக்கப்பட்டது. ஷாகித் பாவ்லா- ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்ன பெரம்பலூர் சாதிக் பாட்ஷா  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.
சாதிக் பாட்ஷா மரணத்தின் பின்னணி, என்ன நடந்தது என்பதை சிபிஐ தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளேன். சாதிக் பாட்ஷா தற்கொலைக்கு திமுக தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகிறேன்.
இதற்கு வழக்குப் போட வக்கிலாத திமுக பொருளாளர் ஸ்டாலின்,  தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேரம் நடத்துகிறது என நாளிதழ்களில் வந்த செய்தியைக் குறிப்பிட்டு நான் பேசியதைக் காரணம் காட்டி எனக்கு வழக்குரைஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவிக்கிறேன். 2 ஜி ஸ்பெக்டரம் பின்னணியில் இருந்தது ஸ்டாலின்தான். வேண்டுமானால் என் மீது மற்றொரு வழக்குப் போடப்பட்டும் . அதை சந்திக்க தயாராக உள்ளேன் என்றார் வைகோ.  தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக