வியாழன், 31 மார்ச், 2016

தமாகவுக்கு 25 தொகுதிகள்....மக்கள் நல கூட்டணி பேச்சு...விஜயகாந்த் தொகுதிகளில் சிலவற்றை

தமிழக சட்டசபை தேர்தலில் பல கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து விட்டன. ஆனால் தமாகாவின் ஜி.கே.வாசன் இன்னமும் கூட்டணி குறித்த குழப்பத்தில் உள்ளார்.அதிமுக கூட்டணியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.கே.வாசன் தற்போது அதிமுக தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது. அதிமுக கொடுக்கும் குறைவான தொகுதிகளை பெற ஜி.கே.வாசன் தயாராக இல்லை எனவும், ஜி.கே.வாசன் கேட்கும் தொகுதிகளை கொடுக்க அதிமுகவும் தயாராக இல்லை என கூறப்படுவதால், இந்த கூட்டணி அமைவது சற்று கடினமே என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.  வாசன் சீக்கிரமே இந்த கூட்டணியில் சேர்ந்து வரலாறு படைக்க வாழ்த்துகிறேன்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், ஜி.கே.வாசன் அந்த கூட்டணிக்கு சென்றால் மக்கள் மத்தியில் தமாகாவின் மீதான நம்பிக்கை போய்விடும் என்பதால் ஜி.கே.வாசன் அந்த கூட்டணிக்கு செல்வதும் தடையாக உள்ளது.இந்நிலையில் ஜி.கே.வாசனை தங்கள் கூட்டணிக்கு இழுக்க மக்கள் நல கூட்டணியும், விஜயகாந்தும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. அப்படி தமாகா தங்கள் கூட்டணியில் இணைந்தால் 20 முதல் 25 தொகுதிகள் வரை ஒதுக்க மக்கள் நல கூட்டணி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 124 தொகுதிகளில் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் விஜயகாந்த் தயாராக இருப்பதாகவும் பேசப்படுகிறது. வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக