வெள்ளி, 25 மார்ச், 2016

டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று (24-3-2016) 94-ஆவதுபிறந்தநாள்.இவரின் டாகுமெண்டரியை புறக்கணித்த தொலைகாட்சிகள்

மறைந்த பின்னணி பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று (24-3-2016) 94-ஆவதுபிறந்தநாள். மிகப்பெரிய ஜாம்பவானான டி.எம்.சௌந்தரராஜனுக்கு தமிழ் சேனல்களால் ஏற்பட்ட அவமரியாதை பற்றிய தகவல் ஒன்று அவரது பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. இது டி.எம்.எஸ். ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
என்ன நடந்தது? திரைப்படக் கல்லூரி மாணவரான விஜயராஜ் என்பவர், பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் டாகுமெண்டரியை உருவாக்கி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் சுமார் 12 வருடங்கள் டி.எம்.எஸ். உடன் பயணித்து, தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பும்வகையில் 150 எபிசோட் எடுத்து முடித்துள்ளார்.

இமயத்துடன் என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்த டாகுமெண்டரியில், டி.எம்.எஸ். பிறந்து வாழ்ந்த வளர்ந்த இடங்கள், 80-க்கும் மேற்பட்ட கலைஞர்களை டி.எம்.சௌந்தரராஜனே நேரடியாக அவரவர் இருப்பிடத்திற்கே சென்று கலந்துரையாடிய நிகழ்ச்சியின் அபூர்வமான பதிவுகள், டி.எம்.எஸ். பாடிய அற்புதமான – அபூர்வமான பாடல் காட்சிகள் – அவரைப்பற்றிய அபூர்வ தகவல்கள் அடங்கியுள்ளன.
டி.எம்.எஸ். பற்றிய மிக முக்கியமான ஆவணமாக கருதப்படக்கூடிய இந்த டாகுமெண்டரியை ஒளிபரப்ப நேரம் ஒதுக்கிக் கேட்டு, பிரபல தொலைக்காட்சிகளை அணுகி இருக்கிறார் விஜயராஜ். இமயத்துடன் தொடரின் டிரைலரையும் அவர்களுக்குப் போட்டுக்காட்டி, ஒளிபரப்புவதற்கு வாய்ப்புக் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார். டி.எம்.எஸ். பற்றிய செய்திப்படத்தை ஒளிபரப்ப எந்த சேனலும் முன்வரவில்லையாம்.
உண்மையிலேயே இது டிஎம்எஸ்.,க்கு ஏற்பட்ட அவமரியாதை தான். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக