திங்கள், 28 மார்ச், 2016

234 தொகுதிகளிலும் இரட்டை இலை ....த.மா.கா.,வுக்கு கதவடைப்பு?

கூட்டணியின் சிறிய கட்சி வேட்பாளர்களை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து, 234 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை, களம் இறக்குவது குறித்து, அ.தி.மு.க., ஆலோசித்து வருவது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. அதேபோல், சட்டசபை தேர்தலிலும் களம் இறங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க., தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், தனித்து போட்டியிட முடியாது என்பதை உணர்ந்த அ.தி.மு.க., தனித்து போட்டி என அறிவிக்கவில்லை.    மூப்பனார் ஏதோ பணக்காராக இருந்ததால்  மேல வர முடிஞ்சுது......மற்றபடி திறமை என்று பார்த்தால் ரொம்ப குறைவு..(ஓர் பொதுக்கூட்டம் கூட நல்லபடியா கூட்டும் திறமை அப்பா மகன் வாசன் ரெண்டு பேருக்கும் இல்லை). திராணியற்ற கூட்டம்..வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு அடுத்த ஜாக்பாட் ஜம்பு இவர்தான் ஒண்ணுமே இல்லாம் ஓஹோன்னு இருந்திட்டார் பத்து வருசம் .....
சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட முடிவு செய்தது.இதற்கிடையில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய த.மா.கா., முடிவு செய்தது. தாங்கள் விரும்பும் தொகுதிகள் பட்டியலையும், அ.தி.மு.க.,விற்கு அனுப்பியது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை, சுமுகமாக நடந்து வருவதாகவும், தகவல் வெளியானது. ஆனால், வெளிப்படையாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.இந்நிலையில், தி.மு.க., அணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன், கை கோர்த்துள்ளது, அ.தி.மு.க., விற்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே, தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள,

இந்திய குடியரசு கட்சி, கொங்கு நாடு இளைஞர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கி, அவர்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து, 234 தொகுதிகளிலும் களம் இறங்குவது என, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சு நடத்த, த.மா.கா.,இன்னமும் அழைக்கப்படவில்லை. அ.தி.மு.க.,விடம் இருந்து, சாதகமாக எந்த தகவலும் வராதது, த.மா.கா., நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், அழைப்புக்காக, ஒன்றிரண்டு நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:த.மா.கா.,வுடன் அதிகாரப் பூர்வ மாக எந்த பேச்சும் நடக்கவில்லை. திரைமறைவில் சிலர் பேசி உள்ளனர். அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள, ஜெயலலிதா முடிவு செய்து விட்டால், அவர்களுக்கு நேரடியாக அழைப்பு செல்லும். கூட்டணி குறித்து அமைச்சர்கள் குழு பேசும். ஆனால், இதுபோன்ற நடவடிக்கை இல்லாததால், த.மா.கா.,வை சேர்க்க, கட்சித் தலைமை விரும்பவில்லை என்றே நினைக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக