தே.மு.தி.க.,வில், 59 மாவட்ட செயலர்கள் உள்ளனர். கடந்த, 11 ஆண்டுகளாக,
பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில்
செலவழித்துள்ளனர்.தனித்து போட்டியிட்ட போது, தேர்தல் செலவையும், இவர்களே
கவனித்தனர்.
தற்போது, பல மாவட்ட செயலர்களும்
கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர். சட்டசபை தேர்தலில்,
சரியான கூட்டணியை தேர்வு செய்வதன் மூலம்,
இப்பிரச்னையில் இருந்து மீளலாம் என, கணக்கு போட்டனர்.இவர்கள் கனவுகளை
தவிடுபொடி ஆக்கும் வகையில், தனித்து போட்டிஅறிவிப்பை, கட்சி தலைவர்
விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். இதோடு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை
அறிவிக்க உள்ளார். இதனால், மீண்டும் செலவு ஏற்படும் என்ற அச்சத்தில்,
மாவட்ட செயலர்கள் உள்ளனர். பணம் சம்பாதிக்க இவர் பின்னால் போவதிலும் பார்க்க போயஸ் பக்கமே தேவல?
கட்சி மாநாட்டுக்கு முன், மாவட்டசெயலர்களை அழைத்து, கூட்டணி குறித்துவிஜயகாந்த் கருத்து கேட்டார். அப்போது, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவே, விருப்பம் தெரிவித்தனர். நேர்காணலிலும், இதே கருத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அதை விஜயகாந்த் புறந்தள்ளி உள்ளார். இதனால், விஜயகாந்த் மீதும், பிரேமலதா மீதும் மாவட்ட செயலர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் வேறு முடிவு எடுப்பதற்கு முன், அழைத்து சரிகட்டும் முயற்சியில், தே.மு.தி.க., தலைமை ஈடுபட்டு வருகிறது.
- நமது நிருபர் --தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக