செவ்வாய், 8 மார்ச், 2016

குஜராத் மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 22 படகுகளை விடுவிக்க பாகிஸ்தான் சம்மதம்

குஜராத் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 22 படகுகளை விடுவிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது தொடர்பாக காராச்சி சென்று பேச்சு நடத்திவிட்டு நாடு திரும்பியுள்ளார் குஜராத் மீன்வளத் துறை துணை இயக்குனர் எம்.கே. சவுத்ரி. தனது பயணம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.கே. சவுத்ரி, “கராச்சி துறைமுகத்திற்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பார்வையிட்டோம். பல படகுகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சரி செய்வதற்காக ரூ. 44 லட்சம் தேவைப்படுகிறது. நாங்கள் பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு ஏஜென்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 22 படகுகளை விடுவிக்க அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளில் பாகிஸ்தானால் பறிமுதல் செய்யப்பட்ட 861 படகுகளில் இந்த 22 படகுகளும் அடங்கும்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக