ஞாயிறு, 13 மார்ச், 2016

அனில் அம்பானிக்கு 12 நிறுவனங்களுக்கான உரிமங்களை அளித்து மத்திய அரசு..!

மும்பை: ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கும் தேவையான பொருட்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்பதற்கான 12 நிறுவனங்களின் உரிமங்களை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்திற்குத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அளித்துள்ளது .
இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் 6,000 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகளைப் பெற உள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எவ்விதமான அறிவிப்புகள் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்

 12 உரிமங்கள் இந்திய ராணுவம் மற்றும் அல்லாமல் சர்வதேச நாடுகளின் ரணுவம் மற்றும் பாதுகாப்புச் சார்ந்த கருவிகள் உபகரணங்களைத் தயாரிப்பதற்கு ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு 12 தொழில்துறை அனுமதிகளை வழங்கியுள்ளது.
சர்வதேச வர்த்தகம் இந்தத் துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ராணுவம் மட்டுமல்லாமல், விண்வெளி துறை சார்ந்தும் வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடற்படை சார்ந்த வாய்ப்புகள் மேலும் இந்திய கடற்படைக்கு ரூ.9,000 கோடிக்கு நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய வாகனங்கள், ரூ.20 ஆயிரம் கோடிக்கு சிறிய ரக ஹெலி காப்டர்கள், ரூ. 50 ஆயிரம் கோடிக்கு பெரிய ரக ஹெலிகாப்டர்கள், நிலத்தில் செல்லும் வாகனங்கள், ஏவுகணைகளுக்கான ரூ. 1 லட்சம் கோடிக்கான வாய்ப்புகளும் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்புக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளது.
ரஷ்யாவுடன் கூட்டு.. மேலும் பிப்பாவ் திட்டத்தின்படி ரூ.30 ஆயிரம் கோடிக்கு, ரஷ்யாவில் சில தேர்ந்தெடுத்த கப்பல் கட்டும் தளங்களில் போர் கப்பல்கள் கட்டும் அடுத்தத் திட்டத்தில் ரிலையன்ஸ் இறங்கத் தயாராக உள்ளது.
விண்வெளி துறை ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே விண்வெளி துறை ஆராய்ச்சி சார்ந்து திருபாய் அம்பானி விண்வெளி பூங்காவை மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாகபுரி அருகே அமைத்துள்ளது. மேலும் பெங்களூருவில் விண்வெளி சார்ந்த பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Read more at: //tamil.goodreturns.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக