சனி, 5 மார்ச், 2016

கன்னையா குமாரை கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு: டெல்லியில் போஸ்டர்...சங்பரிவார் அமைப்பின் / பூர்வாஞ்சல் சேனா அமித் குமார்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரை கொல்பவர்களுக்கு 11 லட்சம் பரிசு அளிக்கப்படும் என டெல்லியில் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லி பிரஸ் கிளப் பகுதியில் வெகு அதிகமாக காணப்படும் இந்த போஸ்டர்கள் சங்பரிவார் அமைப்பின் ஆதரவு இயக்கமான பூர்வாஞ்சல் சேனா தலைவரான அமித் குமார் என்பவரின் பெயரால் வெளியாகியுள்ளது. முன்னதாக, கன்னையாவின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என நேற்று அறிவித்திருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஒருவர் பா.ஜ.க.,வில் இருந்து இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக