புதன், 3 பிப்ரவரி, 2016

பாகிஸ்தான் இந்துக்கோவில் மீது தாக்குதல் பதற்றம் Hindu population in Pakistan from 15% to 1%.


hindu minority in Pakistan degresus from 15% to 1%. 
பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், சிறுபான்மை மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.< பழமையான கோவில் பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.
இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.


தாக்குதல் அவர்களை நோக்கி அந்த நபர்கள், ‘‘கோவிலை விட்டு வெளியேறுங்கள், கோவில் வளாகத்துக்குள்ளே இருக்கக்கூடாது’’ என உத்தரவிட்டனர். அதில் அவர்கள் பயந்து போய் வெளியேறினர்.
அதைத் தொடர்ந்து அந்த நபர்கள், அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த சாமி சிலைகளில் ஒன்றை சேதப்படுத்தி, அதன் புனிதத்துக்கு கேடு விளைவித்தனர். இந்த சம்பவம் கடந்த 21–ந் தேதி நடந்தது. இப்போதுதான் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
‘மக்கள் பயப்படுகிறார்கள்’ இந்த சம்பவம் பற்றி மகாராஜ் ஹிராலால் என்பவர் கூறியதாவது:–
இந்த கோவிலுக்குள் கைத்துப்பாக்கியுடன் வந்து 3 நபர்கள் தாக்குதல் நடத்திய பிறகு கோவிலுக்கு பூஜை செய்ய யாரும் வருவதற்கு பயப்படுகிறார்கள். சிறுபான்மை மக்களிடையே அச்சமும், பதற்றமும் நிலவுகிறது. கோவிலில் தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்று தெரியாது. அவர்களை நாங்கள் இதற்கு முன் பார்த்தது கிடையாது.
இந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம். இந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த கோவிலில் சிதாலா மாதா, சந்தோஷி மாதா, பவானி மாதா என்று 3 தெய்வங்களின் சிலைகள் உள்ளன.
60 வருடங்களுக்கு முன் இங்கு எனது தாத்தா இடம் பெயர்ந்து வந்தபோது மக்களின் வழிபாட்டுக்காக இந்தக் கோவிலை கட்டி வைத்தார்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் வாய்க்கும். அப்படி பலருக்கு குழந்தைப்பேறு வாய்த்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்  dailythanthi.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக