சனி, 6 பிப்ரவரி, 2016

Gujarat பாஜக முதல்வர் 400 ஏக்கர் அரசு நிலம், ஒரு சதுரஅடி, 1.50 ரூபாய்க்கு வாங்கினார்


anandi ben patel should resign for land scam in Gujrat. குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேலின் மகள் அனர் ஜெயேஷ் பட்டேலுக்கு, சொந்தமான நிறுவனத்திற்கு சிங்கங்களின் சரணாலயம் உள்ள பகுதியில், 400 ஏக்கர் அரசு நிலம், ஒரு சதுரஅடி, 1.50 ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு, தாரை வார்க்கப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்து, வருவாய்த் துறை பொறுப்பையும் நிர்வகித்து வருகிற, ஆனந்திபென் பட்டேல் முதலில், 400 ஏக்கர் நிலத்தை, தம் மகளுக்கு வழங்கியிருக்கிறார். மேலும், 172 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கி, அதை தொழில் செய்வதற்கான விலக்கு அளிக்கும் ஆணையையும் பிறப்பித்துள்ளார். குஜராத் அரசால் வழங்கப்பட்டுள்ள, 572 ஏக்கர் நிலம், அந்தப் பகுதியில், 1,200 கோடி ரூபாய் சந்தை மதிப்புடையதாக கூறப்படுகிறது. இதை, ஊழல் இல்லையென்று சொன்னால், வேறு எது ஊழல்? எனவே, பா.ஜ., எந்த ஊழலையும் செய்யாத யோக்கிய சிகாமணிகள் நிறைந்த கட்சி என, பிரதமர் மோடி தம்பட்டம் அடித்து பேசியது போலித்தனமானது.- தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக