வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

Facebook மூலம் மறு காலனித்துவ கருத்துக்கள்...முயற்சிகள்? Free basics பற்றிய விமர்சனங்கள்

வாஷிங்டன்,: இந்தியாவில் நிலவும் இணைய சமநிலையை சீர்குலைக்கும் வகையில், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து,'ப்ரீ பேசிக்ஸ்' என்ற பெயரில், இலவச இணையதள சேவை வழங்க முன்வந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் முயற்சியை, 'டிராய்' தடை செய்ததால், அதன் அதிகாரிகளில் ஒருவர் கோபமடைந்து, இந்தியா பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்தார்.
அதையறிந்த இந்தியர்கள், அந்த அமெரிக்கரை, சமூக வலைதளங்களில் வசை பாடியதை யடுத்து, அவர்மன்னிப்புக் கேட்டுள்ளார்; பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்கும், அந்த நபரை கண்டித்து, 'இனிமேல் இதுபோல் கருத்து தெரிவிக்கக் கூடாது' என்றார். இந்த விவகாரம், இரு நாட்களாக, இந்திய இணையதளங்களில்சூட்டை ஏற்படுத்தியது.      .Murugan - Mumbai :வெள்ளைக்காரன் நம் ஊர் அரசியல்வியாதிகளை விட எவ்வளவோ நல்லவன். அதனால் தான் அடிமைப்படுத்திய நாடாக இருந்தாலும் அந்நாட்டு மக்களுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தான். மூட நம்பிக்கையில் இருந்த நாட்டை கொஞ்சம் சிந்திக்க வைத்தான். விடுதலை என்னும் சுதந்திரம் நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டின் ஊழலுக்கும் கிடைத்துவிட்டதாலேயே இவ்வளவு பிரச்சனை


காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியர்களின் செயல்பாடு, அந்நாட்டின் பொருளாதாரத்தை, பல ஆண்டுகளாக படுபாதாளத்தில் தள்ளி யுள்ளதே! இப்போது, அதை தடுக்க முயற்சிப்பதா?

மார்க் ஆண்ட்ரீசென்பேஸ்புக் நிர்வாக இயக்குனர்

இந்த கருத்து வேதனையளிக்கிறது; இது, பேஸ்புக்கின் கருத்து அல்ல. இந்தியா போன்ற
ஜனநாயக நாடு, பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தியர்களின் மனிதநேயத்தையும், உணர்வுகளையும் மதிக்கிறேன். இந்தியாவுடன் என் தொடர்பை அதிகரிக்கவே விரும்புகிறேன்.

இந்தியாவுக்கு பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உயர்ந்துள்ளதை எண்ணி, ஆச்சரியம் அடைந்துள்ளேன். எனக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடு. அதனுடன் உறவை மேம்படுத்திக் கொள்ளவேவிரும்புகிறேன்.

மார்க் ஜூக்கர்பெர்க்பேஸ்புக் தலைவர்

மன்னிப்பு, மன்னிப்பு!

நேற்று இரவு, டுவிட்டர் வலைதளத்தில், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து, தவறான தகவல் மற்றும் மோசமான ஆலோசனைகளை கூறிவிட்டேன். காலனி ஆதிக்கத்திற்கு, 100 சதவீதம் எதிரானவன் நான்; சுதந்திரம் மற்றும் தனித்துவம், இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும், 100 சதவீதம் இருக்க வேண்டும் என, விரும்புபவன். என் கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இனிமேல், இந்த விவகாரத் தில் கருத்து தெரிவிப்பதாக இருந்தால், மிகுந்த கவனமாக வும் அனுபவத்துடனும் பதிலளிப்பேன்.
ஆண்ட்ரீசென்

'ப்ரீ பேசிக்ஸ்' மூடல்

டிராய் முடிவால், இந்தியாவில் இனிமேல்,'ப்ரீ பேசிக்ஸ்' திட்டத்தை செயல்படுத்த முடியாது என, கருதிய பேஸ்புக் நிறுவனம், அந்த திட்டத்தை இந்தியாவிலிருந்து வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.'இந்தியாவில் ப்ரீ பேசிக்ஸ்செயல்படுத்தும் எண்ணம் இல்லை; அங்கு அந்த திட்டம் கிடைக்காது' என, பேஸ்புக் நிர்வாகி ஒருவர், இ - மெயில் மூலம், இந்திய
ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இணையத்தில் சூடுபறக்க என்ன காரணம்?
நாடு முழுவதும், பொதுமக்களிடம் கேட்டறியப்பட்ட கருத்துக்களின் அடிப்படை யிலும், மத்திய அரசின் உத்தரவு படியும், இணைய சமநிலை தொடர, 'டிராய்' எனப்படும், இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, கடந்த வாரம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதில், 'பேஸ்புக் உட்பட எந்த நிறுவனத்தின் இணையதளத்திற்கும், இணையத்தில் முன்னுரிமை அளிக்க முடியாது; இணையதள சேவைக்கு, தொலை தொடர்பு நிறுவனங்கள் மாறுபாடான கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டிருந் தார். அது போல, 'காலனியாதிக்க முயற்சியில், அமெரிக்கா, பேஸ்புக் மூலம் இறங்கியுள்ளது; அதை, இந்திய அரசு தடை செய்ய வேண்டும்' என, இந்தியர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனால், பேஸ்புக்கின் முயற்சி செல்லாத தாகி விட்டதால், அதிர்ச்சி யடைந்த அதன் இயக்குனர்களில் ஒருவரான, ஆண்ட்ரீசென் என்பவர், சர்ச்சைக்குரிய விதத்தில், 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்தார். அதற்கு பலத்த எதிர்ப்பை, இந்தியர்கள் தெரிவித்த தும், மன்னிப்பு கேட்டார். டுவிட்டரில் தெரிவித்த கருத்தையும், அவர் வாபஸ் பெற்றார்.  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக