ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

Dmk - Congres தொகுதி பங்கீடு குறித்து பிறகு பேசுவோம்...பல கட்சிகள் வர உள்ளன..

மூன்றாண்டுகளுக்கு பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்த்துள்ளது. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை பெற்றுள்ளன; மற்ற கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.இந்நிலையில் கூட்டணி அமைக்கும் விஷயத்திலும் கட்சிகள் மும்முரமாகி உள்ளன. இதன் துவக்கமாக காங்கிரசுடனான கூட்டணியை நேற்று, தி.மு.க., உறுதி செய்தது.தி.மு.க.,
தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பின் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இலங்கை தமிழர் பிரச்னையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., விலகியது; காங்கிரஸ் கூட்டணிக்கும் முழுக்கு போட்டது.இதன்பின் 2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள், தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தன. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்தது. இதனால் இரு
கட்சிகளுக்கும் இடையே நல்லுறவு துளிர்க்க ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மலர்ந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு அமைந்தது.
கருணாநிதியை சந்தித்த பின் ஆசாத் அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., - காங்கிரஸ்இணைந்து சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க., கட்டாயம் வெற்றி பெறும்; ஆட்சியும் அமைக்கும். தி.மு.க., ஆட்சியை உருவாக்குவதே இப்போதைய நோக்கம். இந்தக் கூட்டணியை யாரும் வெல்ல முடியாது.கருணாநிதியை சந்தித்த போது ஆட்சியில் பங்கு பற்றி கேட்கவில்லை. கூட்டணியில் தே.மு.தி.க., உள்ளிட்ட பிற கட்சிகள் பங்கேற்பது குறித்து தி.மு.க., தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார். நல்ல முடிவெடுப்பார்:
ஸ்டாலின்: கருணாநிதி - ஆசாத் சந்திப்பு குறித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், ''தி.மு.க., - காங்., கூட்டணி முடிவாகி உள்ளது; தொகுதி பங்கீடு குறித்து பிறகு பேசுவோம். தே.மு.தி.க.,வுக்கு ஏற்கனவே கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று அவர் நல்ல முடிவை எடுப்பார்,'' என்றார்.
50 'சீட்' கொடுங்க!
கருணாநிதி குலாம் நபி ஆசாத் சந்திப்பில் பேசப்பட்டது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதியிடம் இளங்கோவன் பேசுகையில் 'தமிழக காங்கிரஸ் பலமாக உள்ளது. அதனால்மாவட்டத்திற்கு இரண்டு இடங்களிலாவது போட்டியிட வேண்டும். 2011 சட்டசபை தேர்தலை போலவே 63, 'சீட்'களை எதிர்பார்க்கிறோம்' என்றார்.குலாம் நபி ஆசாத் பேசும் போது, 'நீங்கள் தான் தமிழகத்தின் மூத்த தலைவர். காங்கிரசுக்கு 50 'சீட்' எதிர்பார்க்கிறோம். கூட்டணி உறுதியானவிஷயத்தை சோனியா, ராகுலிடம் தெரிவித்து விடுகிறேன்' என்றார்.அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளிலும் குழு அமைத்து பேசலாம்' என்று தெரிவித்தார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


கோஷ்டிகள் சந்திப்பு!
கருணாநிதியை சந்திக்க செல்வதற்கு முன் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரை, இளங்கோவன், குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, வசந்தகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சந்தித்தனர். அப்போது கோஷ்டி தலைவர்கள் கூறிய விவரம்: ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்; குறைந்தபட்சம், 50 சீட் வேண்டும். தி.மு.க., தரப்பில், 25 சீட் தருவதாக கூறப்படுவதால் குறைந்தபட்சம் 30 சீட் பெற வேண்டும். தே.மு.தி.க.,வையும் கூட்டணிக்கு கொண்டு வர காங்கிரஸ் தரப்பும் பேச்சு நடத்த வேண்டும்.இவ்வாறு கோஷ்டி தலைவர்கள் வலியுறுத்தினர்.
விஜயகாந்துக்கு அழைப்பு!தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து, பின்னர் பேசுவோம்; எங்கள் கூட்டணிக்கு வரும்படி விஜயகாந்தை அழைப்போம். இளங்கோவன் தலைவர் - தமிழக காங்கிரஸ் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக