செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

ஃபரூக் அப்துல்லா கலைஞர் பேச்சுவார்த்தை .......கோபாலபுரத்தில்..

காங்கிரசுக்காக கலைஞருடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? : ஃபரூக்
அப்துல்லா பேட்டி சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை தேசிய மாநாட்டுக்கட்சி மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஃபரூக். அப்போது அவர், ’’காங்கிரஸ் கட்சிக்காக கலைஞருடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமான முடிவு கிடைக்கும்’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக தொடர்ந்து நீடிக்கிறது. அதில் மாற்றமில்லை’’என்று தெரிவித்தார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக