வியாழன், 11 பிப்ரவரி, 2016

பூதாளம் படத்தில்(அரை) நிர்வாணமாகவே மன்சூர் அலிகான் நடிக்கிறார்

Boothalam-6சர்ச்சைக்காரர் என்ற பெயரெடுத்த மன்சூர் அலிகான், அதிரடி’ என்ற படத்தின் மூலம் பல்வேறு தரப் பினரை விமர்சித்ததன் மூலம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) எதிர்த்து, தனியாக ஒரு திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். தான் ஆரம்பிக்கப்பட்ட சங்க தொழிலாளர்களைக் கொண்டு ‘அதிரடி’ படத்தை முடித்து திரையிட்ட மன்சூர் அலிகான், தற்போது ‘பூதாளம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் ரொம்ப வித்தியாசமான கேட்டப் போட்டுள்ள மன்சூர், கோவனம் கட்டிக்கொண்டு விவசாயப் பணி செய்யும், ஏழை விவசாயாக வயதான வேடத்தில் நடித்துள்ளார்.
Boothalam-4
அவரது பேரன்கள் மற்றும் பேத்தியாக அவரது மகன்களும், மகளும் நடித்துள்ளார்கள். மேலும், இப்படத்தின் புகைப்படங்கள் சிலவற்றில், பள்ளி மாணவி ஒருவர் முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிட்ட லேப்-டாப் வைத்திருப்பது போலவும், அதை மன்சூர் அலிகானும், அந்த மாணவியும் வினோதமாக பார்ப்பது போலவும் உள்ளது.இதனால், முதல்வர் ஜெயலலிதாவை மன்சூர் அலிகான், இப்படத்தில் விமர்சித்து காட்சி அமைத்திருக்கலாம் என்று ஒரு கான்ட்ரோவர்சியை கான் தரப்பே கிளப்பி விடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக