ஜுன் 30, 2001. இந்த நாளை தமிழகம் மறந்திருக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நாள் அது.
தி.மு.க.ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில்
ஊழல் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இரவோடு இரவாக எப்.ஐ.ஆர். பதிவு
செய்யப்பட்டது. திமுக தலைவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவரோ, விசாரிக்கப்படக்
கூடாதவரோ கிடையாது. ஆனால், 1996-ல் ஜெயலலிதாவை கைது செய்வதற்கு முன், திமுக
அரசு,எப்படி முழுமையான பூர்வாங்க விசாரணையை முறையாக நடத்தி, அதன் பிறகு,
ஜெயலலிதாவை கைது செய்ததோ, அப்படியல்லவா அதைச்செய்திருக்க வேண்டும்? ஆனால்,
அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகப் போய், வலுக்கட்டாயமாக கருணாநிதியைக் கைது
செய்ய வேண்டிய அவசியம் என்ன? பழிவாங்கும் உணர்ச்சிதான். அதைத்தவிர
ஜெயலலிதாவிற்கு அதில் வேறு காரணம் இருக்கவே முடியாது.
ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்ட
ஜெயலலிதா, தனது கைதுக்கு காரணம் கருணாநிதிதான் என்று உறுதியாக நம்பினார்.
ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வந்ததும், மதுரையில் நடந்த ஒரு
பொதுக்கூட்டத்தில் பேசியபோது, என்னை 27 நாட்கள் சிறையில் வைத்த கருணாநிதியை
பழிவாங்காமல் விடமாட்டேன் என்று வெளிப்படையாகவே பேசினார். ஜோதிடத்தில்
அதிக நம்பிக்கை உள்ள ஜெயலலிதாவுக்கு,அவரின் எதிரியை பழிவாங்கிவிட்டு,
குருவாயூர் கோவிலுக்கு யானையை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்…
எதிரிகள் அழிவார்கள்… என்று சொன்னதன் அடிப்படையிலேயே இரவோடு இரவாக
கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டார் என்பது அப்போது பரவலாக பேசப்பட்டது.
கருணாநிதியின் கைது, ஒரு சில
அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகர ஆணையாளராக இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி
முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.
கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக திமுக ஆட்சி காலத்தில் இருந்த ஜாபர்
சேட் அப்போது போக்குவரத்து இணை ஆணையர். அவர்தான் கருணாநிதி செல்லும்
வழிகளையெல்லாம் ரூட் போட்டுக் கொடுத்தார். மைலாப்பூர் காவல் நிலையத்தில்
அமர்ந்து, அந்த கைது நடவடிக்கையை மேற்பார்வை செய்ததே ஜாபர் சேட்தான்.
ஆனால், இந்த ஜாபர் சேட்டையை முழுமையாக நம்பி 2006-ல் தி.மு.க.தலைவர்
கருணாநிதி பல்வேறு தவறுகளை இழைத்தது தனிக்கதை.
முகம்மது அலி |
கருணாநிதியின் கைது நடவடிக்கையில்
ஈடுபட்ட முக்கிய அதிகாரிகள் ஒருவர் கூட நிம்மதியாக இல்லை. முகம்மது அலி
முத்திரைத்தாள் மோசடிவழக்கில் சிறை சென்றார். முத்துக்கருப்பன் ஜெயலலிதா
ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ரவீந்திரநாத்தும் ஜெயலலிதா
ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். .savukkuonline.com/7412/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக