திங்கள், 1 பிப்ரவரி, 2016

திமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்த விஜய்.....

சென்னை,பிப்.01 (டி.என்.எஸ்) விரைவில் வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், திமுக-வுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டபை தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக விஜய் அறிவித்தார். மேலும் அவருடைய ரசிகர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட செய்ததுடன், அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஆனால், அதிமுக ஆட்சியைப் பிடித்தப் பிறகு விஜய் நடித்த படங்கள் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்தபோது, எந்தவிதம் உதவியையும் செய்யவில்லை.
மேலும், விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பில் நடைபெறுவதாக இருந்த கூட்டங்களும் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், அதிமுக மீது அதிருப்தி அடைந்த விஜய், இந்த தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட போவதாக முடிவு செய்திருப்பதாகவும், தற்போது இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது  tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக