சனி, 6 பிப்ரவரி, 2016

நடிகை சசிரேகாவை கழுத்தறுத்து கொன்ற வில்லன் நடிகர்..... நாளை முதல் குடிக்க மாட்டேன் கதாநாயகி

சென்னை: சினிமாவில் கதாநாயகியின் கழுத்தை தனியாக அறுத்து கொலை செய்வதைப் போல தன்னுடைய மனைவியும் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' என்ற படத்தின் நாயகியுமான சசிரேகாவை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து குப்பை தொட்டியில் வீசியுள்ளார் வில்லன் நடிகர் ஒருவர். கள்ளக்காதலை கண்டித்ததற்காக இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான் அந்த வில்லன் நடிகர். நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கலந்து கொள்ளவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு நடிகை சசிரேகா, வெளிநாடு சென்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் படக்குழுவினரின் பட்டியலில் கூட நடிகையின் பெயரை குறிப்பிடாமல் இருந்தனர். இப்படத்தின் டிரைலரில் சசிரேகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இருக்கிறது. Cops solve mystery of headless body, arrest husband and actor கடந்த ஜனவரி சென்னை ராமாபுரம் அருகே 5ம்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. இதுபற்றி ராயலநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி எந்தவித தகவலும் தெரியாமலேயே இருந்தது. இதனால் இந்த வழக்கை சவாலாக எடுத்து தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக துப்பு துலக்கினர். சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட பெண் சினிமா நடிகை போன்ற தோற்றத்தில் இருந்ததால், அது சம்பந்தமான விசாரணையில் போலீசார் இறங்கினர். அப்போது 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த சசிரேகா கடந்த 2 மாதங்களாக காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர், சினிமா வட்டாரத்தில் யார்-யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சசிரேகா கதாநாயகியாக நடித்திருக்கும் நாளை முதல் குடிக்க மாட்டேன் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரமேஷ் சங்கர் என்பவரும், சசிரேகாவும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது. இருவரும் போரூர் அருகே உள்ள மதனந்தபுரத்தில் வசித்து வந்ததும் அவர்களுடன் லக்கியா என்ற பெண்ணும் தங்கி இருந்ததும் தெரியவந்தது. இவரை ரமேஷ்சங்கர் தனது தங்கை மாதிரி என்று சசிரேகாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுபோன்ற தகவல்களை திரட்டியதும் மதனந்த புரத்தில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் ரமேஷ்சங்கர் அந்த வீட்டை காலி செய்து விட்டு லக்கியாவுடன் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் ரமேஷ்சங்கர் மீதான சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சசிரேகாவின் செல்போன் மற்றும் ரமேஷ் சங்கரின் செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீசார் பரிசோதித்து பார்த்தனர். அப்போது, கடந்த மாதம் 4ம் தேதி அன்று இருவரது செல்போன் சிக்னல்களும், ஒரே பகுதியை காட்டியது. போரூர் மதனந்தபுரம் வீட்டில் இருந்து சசிரேகா பிணமாக கிடந்த ராமாபுரம் வரையில் 2 பேரின் செல்போன்களும் ஒரே நேர் கோட்டில் சென்றிருப்பது உறுதியானது. இதை தொடர்ந்தே ரமேஷ் சங்கர் தான் சசிரேகாவை கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு இதையடுத்து சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரமேஷ் சங்கரையும், லக்கியாவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தங்கை என்கிற போர்வையில் ரமேஷ்சங்கருடன் வசித்து வந்த லக்கியா, அவரது கள்ளக்காதலி என்பது தெரியவந்தது. போரூர் மதனந்தபுரத்தில் உள்ள வீட்டில் ரமேஷ்சங்கர், சசிரேகா, லக்கியா ஆகிய 3 பேருமே ஒன்றாக வசித்துள்ளனர். அப்போது லக்கியாவுடனான கள்ளக்காதலை சசிரேகா கண்டித்துள்ளார். கழுத்தை அறுத்து கொலை இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்சங்கரும், லக்கியாவும் சேர்ந்து சசிரேகாவை கொலை செய்து பின்னர் கொடூரமாக கழுத்தை துண்டித்துள்ளனர். இதன்பின்னர் போலீசாரை திசை திருப்புவதற்காக அவரது ஆடைகளை கிழித்து எரிந்து விருகம்பாக்கம் பகுதியில் கால்வாயில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரத்தில் போட்டு விட்டு தப்பிச் சென்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது. சினிமாவில் வாய்ப்பு கொலையுண்ட சசிரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ரோஷன் என்ற மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்த சசிரேகா சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போதுதான் ரமேஷ் சங்கரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதன் பின்னரே நாளை முதல் குடிக்க மாட்டேன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவே இப்போது எமனாகி சசிரேகாவின் உயிரையும் பறித்துள்ளது. 6 மாதத்திற்கு முன்னரே புகார் ரமேஷ்சங்கரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சசிரேகா, கடந்த 6 மாதத்துக்கு முன்னர் (செப்டம்பர் மாதம்) மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது தனது மகன் ரோஷனை கடத்தி வைத்துக்கொண்டு ரூ.6 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மீது மடிப்பாக்கம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் பேட்டி அளித்திருந்தார். அப்போது ரமேஷ்சங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், சசிரேகா கொலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் லக்கியாவை பலரிடம் காண்பித்து ரமேஷ்சங்கர் லட்சக்கணக்கில் பணவசூல் செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக