செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

மோகன்லால் வேதனை..தேசபக்தியாம்?.கள்வர்களின் கடைசி புகலிடம் தேசபக்தியாகிவிட்டது


இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்ந்துதான் என்ன பயன்? : நடிகர் மோகன்லால் வேதனை அடேங்கப்பா என்னா இவரது தேசபக்தி?
நடிகர் மோகன்லால் இந்திய ராணுத்தால் கவுரவ லெப்னிடன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டவர்.  அவர் “இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்ந்துதான் என்ன பயன்?” என்ற தலைப்பில் தனது வலைத்தளப் பதிவில்  வேதனையை வெளியிட்டுள்ளார்.டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் தனக்கு கடும் வேதனையை அளிப்பதாக மலையாள நடிகர் மோகன்லால் தனது வலைத்தளப் பதிவில் கருத்தை வெளியிட்டுள்ளார். தனது பணத்தை எல்லாம் துபாயில் பதுக்கி விட்டு....பழம்பெரும் நடிகர் திலகனை உலகத்தை விட்டே விரட்டி விட்டு தனது இறால் பண்ணையில் பெண்களை.....சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களை கொச்சை படுத்தியே திரையில் வசனம் பேசும் இவர் விஸ்கி விளம்பர தூதருமாவார்... நிஜவாழ்விலும் மிகப்பெரிய நடிகன் 

சியாச்சினில் நடந்த பனிச்சரிவில் 10 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். அதில், தனது 4 மாத குழந்தையை கூட பார்க்க முடியாத நிலையில் உயிரிழந்துள்ள சுதீசும் ஒருவர். மகளை பார்க்கக் கூட விடுமுறை எடுக்க முடியாமலேயே சுதீஷ் இறப்பை தழுவியுள்ளார்

.நாட்டுக்காக கடும் குளிர் நிறைந்த பிரதேசத்தில் பணியாற்றி இறப்பை சந்தித்திருக்கும் தருவாயில் இப்போது தேசப்பற்றுக்கு நாம் பொருள் தேடிக் கொண்டிருக்கிறோம்.
இது நாட்டுக்காக உயிரிழந்தவர்களை நிச்சயம் அவமதிக்கும் செயல். இப்படி போராட்டம் நடத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், பல்கலை சென்று படிக்கவும் எல்லையோரத்தில் போராடும் இவர்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட்டனர்.

;நாம் வீட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்டு டி.வி. பார்ப்பதற்கும் அவர்கள்தான் காரணம். தேசப்பற்றுக்கு பொருள் தேடுபவர்கள்தான் ராணுவத்தினரையும் விமர்சிக்கின்றனர். தங்கள் குடும்பத்தினரை கூட பார்க்க முடியாமல் அவர்கள் உங்களை காக்கின்றனர். அதற்காக பாதுகாப்பு படையினருக்கு "நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தை பாதுகாக்காத எந்த ஒரு விவாதமும், அதாவது பலபேர் தியாகம் செய்து நாம் வாங்கிய, இப்போது வரை பராமரித்து வரப்படும், சுதந்திரத்தை வலுப்படுத்த உதவாத எந்த ஒரு விவாதமும் அர்த்தமற்றது என்பதோடு, தேசத்துக்கு பெரிய அவமதிப்பாகும்.

எது நாட்டுப்பற்று என்பதை விளக்க நாம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதைவிட இந்த உலகில் வெட்கக் கேடானது ஏதாவது இருக்க முடியுமா? நாட்டுக்காக தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்தோருக்கு இதைவிட வேறு இழுக்கு என்ன வேண்டும்?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசும்போதோ, அல்லது மகளுக்கு தந்தை கடிதம் எழுதும் போதோ, தங்கள் மகனோ, மகளோ தேசத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவது கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும். தேசத்தின் அருமை பெருமைகளை கூறி கூறி வளர்க்க வேண்டும். சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக