திங்கள், 8 பிப்ரவரி, 2016

தமிழக - இலங்கை மீனவர்கள் விரைவில் மீண்டும் பேச்சு?

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, தமிழகம் - இலங்கை மீனவர் பிதிநிதிகளின் பேச்சு, விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்வு காணும் விதமாக, அதிகாரிகள் முன்னிலையில், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளும் சந்தித்த, மூன்று கட்ட பேச்சு நடந்தன.'பாக்., நீரிணைப்பகுதியில், ஆண்டுக்கு, 90 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி தர வேண்டும்' என்ற கோரிக்கையை, இலங்கை மீனவர்கள் ஏற்காததால், பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில்,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை சென்று, அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தலைவர்களை சந்தித்து பேசினார்.

மீன் பிடித்தல் தொடர்பாக, தமிழகம் - இலங்கை மீனவர்களிடையே, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது முக்கிய பேச்சாக இருந்தது.இதனால், அடுத்தகட்ட பேச்சுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால், இரு நாட்டு மீனவர்கள் விரைவில் சந்தித்து பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரின் இலங்கை பயணத்தைஅடுத்து, பேச்சுக்கான தேதி விரைவில் ெவளியாகும் என, எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடியால், மீனவர் பிரச்னை தீரும் என, மீனவ மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், 79 படகுகள் விடுவிக்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். படகுகளை விடுவிக்க நடவடிக்கை வேண்டும். ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு மாறும் வரை, பாக்., நீரிணையில் குறித்த காலம் மீன் பிடிக்க அனுமதி பெற்றாலே சிக்கல்கள் தீரும்.
அருளானந்தம், நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக