ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு என போற்றப்படும் உலகின் மிக உயரிய .
விருதான ‘குளோபல் டீச்சர்’ பரிசின் இந்தாண்டு இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றுப்பவர்களின் பட்டியலை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் வெளியிட்டார். உலகின் 148 நாடுகளில் இருந்து வந்திருந்த 8000 துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து பத்து ஆசிரியர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒருவரும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பரிசை தட்டி செல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை காத்துக்கொண்டிருக்கிறது. துபாயில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் உலகளாவிய கல்வி மற்றும் திறன் குறித்த மாநாட்டில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.2012 இல் நிறுவப்பட்ட இந்த விருது எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடும் தன்னலமற்று சேவை புரிந்து வரும் ஆசிரியர்களை கவுரவிப்பதற்கும் வார்க்கி எனப்படும் நிறுவனத்தால் நிறுவப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பரிந்துரைகளிலிருந்து தேர்வு பெரும் தலைச்சிறந்த ஆசிரியர்களின் கதைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதனால் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என நம்பப்படுகிறது
வார்க்கி நிறுவனத்தின் நிறுவனர் சன்னி வார்க்கி கூறுகையில் “மாணவர்களின் வளர்ச்சியிலும் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஆசிரியர்களின் மகத்தான பங்களிப்பிற்கு ஒவ்வொரு வருடமும் உலகின் மூலை முடுக்குகளில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்களே சாட்சி’ என்றார். இந்த வருட பரிசின் சிறப்பு என்னவெனில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியிருக்கும் பத்து பைனலிஸ்ட்களை உலக புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அறிமுகப்படுத்தியது தான். தாலிபான்களிடம் இருந்து உயிர்பிழைத்து தப்பித்து வந்து வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய டென்ட் கொட்டகையில் பாகிஸ்தான் இளம் பெண்களுக்கு பாடம் சொல்லிகொடுத்து வரும் அகீலா அசிபி தொடங்கி கடினமான கணக்கு பாடத்தை
சுலபமாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் காலின் ஹெகர்ட்டி வரை இறுதிசுற்றில் இருக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் மேற்கொண்டு வரும் ஆசிரியப் பணியில் பெரிய அளவில் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் மும்பையை சேர்ந்த ராபின் சவுராசியா ‘ரெட் லைட்’ மாவட்டம் என்றழைக்கப்படும் கமத்திபுரா மாவட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பெண் குழந்தைகளுக்கு கல்வியுடன், தங்களுக்காக சொந்தமாக யோசிக்கக்கூடிய அளவு தன்னம்பிக்கையையும் சேர்த்து கொடுத்துவருகிறார். இதுவரை கிட்டத்தட்ட ஒரு
லட்சம் மக்கள் இவரின் சேவையால் பயனடைந்துள்ளனர். ராபின் இந்த பரிசை வெல்லுவாரா என பொறுத்திருந்து பார்போம்.
கோ. இராகவிஜயா
மாணவப் பத்திரிக்கையாளர் விகடன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக