செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

திமுகவுக்கு ராகுல் நிபந்தனை: கலைஞர்தான் முதல்வராக வேண்டும்

தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்தால்,
கருணாநிதியே முதல்வராக வேண்டும்' என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, காங்கிரஸ், தி.மு.க.,வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும், தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளன. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்களையும் பெற்று முடித்துவிட்டன.  உறுதிமொழி: இந்நிலையில், மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, தி.மு.க., கூட்டணியில் காங்., இணைந்து, முதலில் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், கூட்டணியில் இணைந்து உள்ளது.  நீண்ட நாளாக திமுகவை பாஜக பக்கம்  கொண்டு போயி சேர்க்க முயற்சி நடக்கிறது. சு சாமி சொல் கேட்டவிங்க நல்லாவே இருக்க மாட்டய்ங்க  
இருப்பினும், 'தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால், கருணாநிதி தான் முதல்வராக பதவியேற்க வேண்டும்' என்ற உறுதிமொழியை பெற்ற பின்னரே, கூட்டணியை, காங்., மேலிடம் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதுதொடர்பாக, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலின் போதே, தி.மு.க., கூட்டணிக்கு காங்., முயற்சித்தது. தி.மு.க., மறுத்து
விட்டதால், இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு, தோல்வியை தழுவின. சேர்ந்து போட்டியிட்டிருந்தால், தென் மாவட்டங்கள் உட்பட, 20 தொகுதியிலாவது, இரு கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கலாம். லோக்சபா தேர்தலில் கண்ட தோல்வி நிலைமை, மீண்டும் வராமல் இருப்பதற்காக, தற்போது காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., முயற்சித்தது. தி.மு.க., தரப்பில், காங்., தேசிய தலைவர் சோனியாவிடமும்; துணைத் தலைவர் ராகுலிடமும், கனிமொழி பேசினார்.

ஆதரித்தவர்:
உடன், தமிழக காங்., தலைவர்களான இளங்கோவன், மணிசங்கர் அய்யர், பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரையும், பிப்., 7ம் தேதி, டில்லிக்கு அழைத்தராகுல், மாலையில் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக காங்., தலைவர்கள் பலரும், 'தி.மு.க., கூட்டணியே, காங்கிரசுக்கு இயற்கையான கூட்டணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், 50 'சீட்'களை கட்டாயம் பெற வேண்டும்' என்றனர்/div> அதை ஏற்க மறுத்த ராகுல்,
'2004ல், சோனியா பிரதமராவதற்கு எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை ஆதரித்தவர் கருணாநிதி தான். அதனால், தி.மு.க., அணி வெற்றி பெற்றால், அவரே முதல்வராக வேண்டும் என்பதை, எங்கள் தரப்பில் நிபந்தனையாக வைத்தோம். அதை, கருணாநிதியே உறுதி செய்துவிட்டார். 'மற்றபடி, காங்கிரசுக்கு மரியாதையான எண்ணிக்கையில், அவர்களே, 'சீட்' தர ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, சீட் விஷயத்தில், யாரும் தி.மு.க.,வை கசக்க வேண்டாம்' என்று சொல்ல, தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இப்படித்தான், தி.மு.க., - காங்., கூட்டணி முடிவானது. இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -  dinamalar.comthim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக