திங்கள், 22 பிப்ரவரி, 2016

வங்கதேசத்தில் இந்து மதகுரு வெட்டிக்கொலை

வங்கதேசத்தில் இந்து மதகுரு ஒருவர் தனது மடத்தில் வைத்து ஞாயிறன்று
வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அந்த கொலை தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் வங்கதேச ஜமாத்துல் முஜாஹிதீன் என்னும் தடை செய்யப்பட்ட இஸ்லாமியவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகிறார்கள்.அந்த மதகுருவான ஜகதீஸ்வர் ராய் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பஞ்சாகார்க் மாவட்டத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இஸ்லாமிய அரசு குழு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. ஆனால், தமது நாட்டில் இஸ்லாமிய அரசு செயற்படுவதை வங்கதேச அரசாங்கம் மறுத்துள்ளது.bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக