திங்கள், 29 பிப்ரவரி, 2016

மீண்டும் மீண்டும் பொய்சொல்லும் ஸ்மிருதி இராணி.....அம்பலப்படுத்திய மருத்துவர்

ரோஹித் வெமுலாவை பரிசோதிக்க மருத்துவர்களை சக மாணவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் தற்கொலை நடந்த அறைக்குள் போலீசாரை அனுமதிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது தவறானது என்று பல்கலைக்கழக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜஸ்ரீ மல்பாத் கூறியுள்ளார். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.அப்போது பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'ரோஹித் வெமுலா தற்கொலை முயற்சி மேற்கொண்ட பின் அவரைப் பரிசோதிக்க மருத்துவர்களை மாணவர்கள் அனுமதிக்கவில்லை என்றும், உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் ரோஹித்தின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் கூறினார்.
;இக்கூற்றை மறுத்துள்ள டாக்டர் ராஜஸ்ரீ, மாணவர்கள்தான் தன்னை ரோஹித்தின் அறைக்கு அழைத்துச் சென்றனர் என்றும், எப்படியாவது ரோஹித்தின் உயிரை காப்பாற்றும்படி அவர்கள் தன்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.
;‘ஜனவரி 17ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு எனக்கு ஹாஸ்டலில் இருந்து தொலைபேசி வந்தது. நான்கு நிமிடத்தில் நான் அங்கு சென்றேன். அப்போது ரோஹித்தின் உடல் கீழே இறக்கப்பட்டு தரையில் கிடத்தப்பட்டு இருந்தது. நான் உடலைப் பரிசோதித்தேன். ஏற்கெனவே அவர் இறந்திருந்தார். நான் வந்து ஐந்து நிமிடங்களில் போலீசாரும் வந்தனர்’ என்று டாக்டர் ராஜஸ்ரீ கூறியுள்ளார்.&

;மறுநாள் காலை 6.30 மணி வரை போலீசாரை மாணவர்கள் அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மருத்துவர் சொன்னதை நிரூபிக்கும் வீடியோ காட்சிகளையும் மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக