செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

டெல்லி ஆர்ப்பாட்டம் ராகுல் கெஜ்ரிவால் கூட்டாக பங்கேற்பு..மறைந்த மாணவன் வேமுலாவின்....

JNU row: Rahul Gandhi joins protests; Kejriwal says Centre at 'war' with students
டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கோரி தலைநகர் டெல்லியில் இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடைபெற்ற பேரணியை ஐதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் முன்னின்று தலைமை தாங்கினர். ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக