புதன், 24 பிப்ரவரி, 2016

தேமுதிக நேர்காணல் அறிவிப்பு....முதல்ல கிங்கா குயினா காலி டப்பாவன்னு கண்டுபிடியுங்க

வழக்கமாக எல்லோருக்கும் அல்வா கொடுக்கும் விஜயகாந்துக்கு இந்த முறை சு.சுவாமி அல்வா கொடுத்திட்டாருங்கோ ...இதான் சொந்த புத்தில சோசிக்கனுகிறது...இனி முதலுக்கு மோசமாகாம கப்பல் மிதக்குற  வழியை பாருங்க கப்டன் .....தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் நேர்காணல் குறித்து, தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  எனவே விருப்பமனு அளித்துள்ளவர்கள் நேரில் வருகைதந்து நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வரும்பொழுது, கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு தேவையான ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் (ORIGINAL) சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தலில், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை (24.02.2016) புதன்கிழமை காலை 9 மணிக்கு கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை கழகத்தில் நடைபெற இருக்கின்றது. தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக