சனி, 20 பிப்ரவரி, 2016

பிரேமலதா சாமியாட்டம்....ஜெயலலிதாவே உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே....

காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வேடலில் நடந்த தேமுதிக மாநாட்டின்போது நீண்ட உரையாற்றினார் பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சின்போது அவர் தமிழக அமைச்சர்களை சரமாரியாக சாடினார். அடிமைகள் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார். a மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நீயெல்லாம் மனுஷனா என்று காட்டமாக கேட்டார். யுபிஎஸ் என்றார். உச்சகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சித்தார் பிரேமலதா. ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய அவர் உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும் என்று அவர் பேசியதுதான் உச்சகட்ட மோசமான பேச்சு.நம்மளுக்கு என்னவோ இது ஒரு வகை  ஏமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது....திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால் சு சாமி ரொம்ப நொந்து போய்விட்டார் அதாய்ன் இவுங்க சாமியாடுறாய்ங்க?இப்ப திமுகவை குஷிப்படுத்த இந்த டிராமா...முந்தி அதிமுகவை குஷிப்படுத்த கலைஞர் மீது வசைமாரி.....ரொம்ப கேவலமாக  அரசியல் பண்றாய்ங்க  
தலைவர்கள் நிதானமாக பேசினால்தானே தொண்டர்கள் நிதானமாக இருப்பார்கள்.. இவரே இப்படியென்றால் அடுத்து விஜயகாந்த் பேசப் போகிறார்.. என்ன பேசுவாரோ!

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக